பக்கம் எண் :

614யுத்த காண்டம் 

7004.

'கூவி இன்று என்னை, நீ போய், "தன் குலம் 

முழுதும் கொல்லும்

பாவியை, அமருக்கு அஞ்சி அரண் புக்குப்  

பதுங்கினானை,

தேவியை விடுக! அன்றேல், செருக் களத்து 

எதிர்ந்து, தன்கண்

ஆவியை விடுக!" என்றான், அருள் இனம்

விடுகிலாதான்.

 

அருள் இ(ன்)னம் விடுகிலாதான் - (இராவணனை நோக்கி
அங்கதன்)  இன்னும்   உன்னிடம் கருணை நீங்காத இராமபிரான்;
இன்று என்னைக் கூவி
- இன்று என்னை அழைத்து; நீ போய்-
நீ சென்று;  தன் குலம் முழுதும் கொல்லும் - தனது (அரக்க)
குலம் முழுவதையும் அழிக்கவுள்ள; பாவியை- பாவப்பட்டவனும்;
அமருக்கு   அஞ்சி
-  போரிடுதற்குப் பயந்து; அரண்புக்குப்
பதுங்கினானை
-   கோட்டைக்குள்      புகுந்து     பதுங்கி
ஒளிந்திருப்பவனுமாகிய   இராவணனைப்   (பார்த்து); தேவியை
விடுக
- சீதையாம் தேவியை  (உடனே) விட்டு விடுக; அன்றேல்
-  அவ்வாறு    விட    விரும்பவில்லையாயின்; செருக்களத்து
எதிர்ந்து
- போர்க்களத்தில்   எதிர்நின்று;   தன் கண் - தன்
முன்பாக; ஆவியை விடுக- உயிரை விட்டுவிடுக (என்று கூறுக);
என்றான்
- என்று (என்னிடம்) கூறினான். (என்றான்)
 

தன் குலத்தை வாழ்விக்காதது பாவச்  செயலுள்   தலையாய
செயலாதலின், இராவணன், "தன் குலம் முழுதும் கொல்லும் பாவி"
எனப்பட்டான்.    வீடணன்     இராமன்  குலமாகிய இட்சுவாகு
குலத்தவன்   ஆவதை,    "நீ     விபூஷணனை,    இராவணன்,
"குலபாம்ஸநம்"  (குலத்திற்கு  அழுக்கு)   என்றான்.   பெருமாள்
இக்ஷவாகு வம்சியாக  நினைத்து    வார்த்தையருளிச்   செய்தார்"
(ஸ்ரீ வசந. சூரணை.231)   என்பார்  பிள்ளை     லோகாசாரியார்.
"பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின் அவன், பிழைத்த போதே"
(கம்ப. 9105) என வீடணன் இந்திரசித்தனிடம் கூறுவதும் காண்க.
  

(31)
 

7005.

' "பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள்,

படைஞரோடும்

மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள்,

வனத்துள் வைகி