பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 615

இருந்துழி வந்த நங்கை இருஞ்செவி முலையும் 

மூக்கும்

அரிந்துழி, வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை

உண்டோ?

 

பாட்டியாக்கை- பாட்டியாகிய தாடகையின் உடலை; பருந்து
உ(ண்)ணப்   படுத்தநாள் 
-  பருந்துகள் தின்னும்படி கொன்ற
நாளிலும்;   மருந்தினும்   இனிய   மாமன்  மடிந்த நாள் -
அமிழ்தினும் இனியவனான  தன்  மாமன்    சுபாகு (வீரரோடும்)
இறந்து பட்ட நாளிலும்; வனத்துள் வைகி இருந்துழி - காட்டில்
(பஞ்ச வடியில்) வாழ்ந்த காலத்தில்; வந்த நங்கை- அங்கு  வந்த
சூர்ப்பணகையின்; இருஞ்செவி முலையும்   மூக்கும் -  பெரிய
காதுகளையும்     மார்புகளையும்    மூக்கையும்;   அரிந்துழி-
(இலக்குவன்)  அரிந்து    போட்ட    நாளிலும்; வந்திலாதான் -
போருக்கு வாராதவன்; இனிச் செய்யும் ஆண்மை உண்டோ?-
இப்போது போரிட வந்து வீரம் காட்டுவது உண்டோ? (இல்லை)
 

பாட்டி-தாடகை.    மாமன்-சுபாகு.   தாடகையின்    மகன்,
மாரீசனின் சகோதரன். துயர்க்காலத்தே மருந்து  போன்று  வந்து
தாயுடன் பிறந்த மாமன் உதவுவது     இந்நாட்டுப் பண்பாதலால்,
"மருந்தினும் இனிய மாமன்" என்றான்.
  

(32)
 

7006.

' "கிளையொடும் படைஞரோடும், கேடு இலா  

உயிர்கட்கு எல்லாம்

களை என, தம்பிமாரை வேரொடும் களையக்  

கண்டும்,

இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை

வௌவும்

வளை எயிற்று அரக்கன், வெம் போர்க்கு, இனி 

எதிர் வருவது உண்டோ?

 

கேடு    இலா உயிர்கட்கு எல்லாம்- அழிவற்ற உலகத்து
உயிர்களாகியவெல்லாம்    (அழிப்பதற்கு); களை என- இவர்கள்
களையாக    உள்ளனர்    என்று; தம்பிமாரைக் கிளையொடும்
படைஞரோடும்
- (கரன் முதலிய) தம்பியரைச்   சுற்றத்தாரோடும்;
சேனை வீரர்களோடும்; வேரொடும் களையக்   கண்டும்- அடி
முதலோடு அழித்துவிட்டதை அறிந்திருந்தும்; இளையவன் பிரிய-
(நேரே வந்து போரிடும் துணிச்சலின்றி) என்னைவிட்டு