பக்கம் எண் :

616யுத்த காண்டம் 

இளையவன்   பிரியுமாறு;  மாயம் இயற்றி - வஞ்சனைச் செயல்
புரிந்து,  (அவன் அகன்ற சமயத்தில்); ஆயிழையை வௌவும் -
சீதா   தேவியைக்  கவர்ந்து வந்த, வளை எயிற்று அரக்கன் -
வளைந்த     கோரப்    பற்களையுடைய    அந்த   இராவணன்,
வெம்போர்க்கு
-   கொடிய  யுத்தத்திற்கு, இனி எதிர் வருவது
உண்டோ?
- இனி மேல் எதிர்த்துச் சண்டையிட வருவது ஏது?
 

(33)
 

7007.

'ஏந்திழைதன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர்தம்மை

எற்றி,

சாந்து எனப் புதல்வன்தன்னைத் தரையிடைத் 

தேய்த்து, தன் ஊர்

காந்து எரி மடுத்து, தானும் காணவே, கடலைத்  

தாவிப்

போந்த பின், வந்திலாதான் இனிப் பொரும் போரும்

உண்டோ?

 

ஏந்திழை தன்னைக் கண்ணுற்று- (அனுமன்) சீதா தேவியைச்
சந்தித்து; எதிர்ந்தவர்தம்மை எற்றி- அப்போது தன்னை எதிர்த்த
(அத்தனை) வீரர்களையும் தாக்கி ஒழித்து;   புதல்வன்  தன்னை-
அட்சய குமாரனை; சாந்து என-(குழைத்த) சாந்து போல் ஆகுமாறு;
தரையிடைத் தேய்த்து
- மண்ணில்  இட்டுத்   தேய்த்து; தானும்
காணவே
- தன் கண் முன்பே; தன்ஊர்-தனது இலங்கை மாநகரை;
காந்து எரி மடுத்து
- எரியும்  நெருப்பிற்கு  இரையாக்கி; கடலைத்
தாவிப் போந்த பின்
-கடலைத் தாண்டி வந்து அடைந்த பின்னரும்;
வந்திலாதான்
-  (போருக்கு)   வந்தடையாத   இராவணன்;  இனிப்
பொரும் போரும்
உண்டோ? - இனி   மேல் செய்யப் போகின்ற
போரும் உண்டோ?
 

சந்தனக்   குழம்பு    போல்    தரையில்  தேய்க்கப்பட்டவன்
இராவணன் மகனான, அக்ககுமாரன். (5705)
 

(34)
 

7008.

' "உடைக் குலத்து ஒற்றர்தம்பால் உயிர் கொடுத்து

உள்ளக் கள்ளம்

துடைத்துழி, வருணன் வந்து தொழுதுழி, தொழாத

கொற்றக்