பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 617

குடைத் தொழில் உம்பி கொள்ளக் கொடுத்துழி,  

வேலை கோலி

அடைத்துழி, வந்திலாதான் இனி வர ஐயம்

உண்டோ?

 

தொழாத கொற்றக்  குடைத்  தொழில் -  (தன்னைப் பிறர்
தொழுவது அல்லாமல் தான் பிறரைத்) தொழ வேண்டாத இலங்கை
ஆட்சியை; உம்பி கொள்ளக் கொடுத்துழி- உன் தம்பி வீடணன்
பெறக் கொடுத்த போதும்; வருணன் வந்து தொழுதுழி  - விட்ட
கணைக்கு ஆற்றாது வருணன் வந்து சரணம் அடைந்த    போதும்;
வேலை கோலி அடைத்துழி
- கடலை வளைத்துச் சேது சமைத்த
போதும்; குலத்து உடை ஒற்றர் தம் பால்- அரக்கர்   குலத்தில்
தோன்றிய ஒற்றர்களுக்கு; உயிர் கொடுத்து-உயிர்ப் பிச்சையளித்து;
உள்ளக் கள்ளம்  துடைத்துழி
-  அவர்களின் நெஞ்சத்திலிருந்த
வஞ்சனையை அகற்றி     அனுப்பிய  போதும்; வந்திலாதான் -
வாராதிருந்தவன்; இனி வர-இனி மேல் வருவான் என்று நினைக்கும்;
ஐயம் உண்டோ?
- ஐயப்பாட்டிற்கு இடம் உண்டோ? (இல்லை)
 

ஒற்றர்களுக்கு    உயிர்ப்   பிச்சையளித்ததும்,  அவர்கள் தம்
உள்ளத்து     வஞ்சம்    மாறி,  இராவணனிடத்தே இராமன் புகழ்
உரைத்ததும் ஒற்றுக் கேள்விப்படலத்துள் காண்க.
 

(35)
 

7009.

' "மறிப்புண்ட தேவர் காண, மணி வரைத் தோளின்

வைகும்

நெறிப் புண்டரீகம் அன்ன முகத்தியர்முன்னே, 

நென்னல்,

பொறிப் புண்டரீகம் போலும் ஒருவனால், புனைந்த 

மௌலி

பறிப்புண்டும், வந்திலாதான் இனிப் பொரும் பான்மை

உண்டோ?"

 

மறிப்புண்ட தேவர் காண- (தன்னால் சிறையில்) அடைபட்ட
தேவர்கள் எல்லாம் கண்டு கொண்டிருக்க;மணி  வரைத்தோளின்
வைகும் 
-   அழகிய  மலை   போன்ற   தோள்களில் தங்கும்;
நெறிப்புண்டரீகம்   அன்ன முகத்தியர் முன்னே
- (மலரும்)
ஒழுங்கினையுடைய தாமரை மலர் போன்ற முகங்களையுடைய தேவ
மங்கையர்க்கு முன்பாக; நென்னல் - நேற்று;