பக்கம் எண் :

618யுத்த காண்டம் 

பொறிப்புண்டரீகம் போலும் ஒருவனால் - வரிகளையுடைய
புலியினைப் போன்ற  சுக்கிரீவனால்; புனைந்த மௌலி- தான்
அணிந்திருந்த   மகுட மணிகள்; பறிப்புண்டும்- பறிக்கப்பட்ட
போதும்; வந்திலாதான் -  போர்   புரிய வாராத இராவணன்;
இனிப் பொரும்பான்மை உண்டோ?
- (இனி வெளிப்போந்து)
போர்புரியும் தன்மை உள்ளவனோ? (இல்லை)
 

(36)
 

7010.

' "என்று இவை இயம்பி வா" என்று ஏவினன்

என்னை; எண்ணி

ஒன்று உனக்கு உறுவது உன்னித் துணிந்து உரை;

உறுதி பார்க்கின்,

துன்று இருங் குழலை விட்டு, தொழுது வாழ்;

சுற்றத்தோடும்

பொன்றுதிஆயின், என் பின், வாயிலில் புறப்படு'

என்றான்.

 

என்று இவை இயம்பி வா என்று - என்று  மேலே கூறிய
இந்தச் சொற்களை(உன்னிடம்) கூறி(உன் உளக்கருத்தினை அறிந்து)
வா என்று; என்னை ஏவினன் - எனக்கு ஆணையிட்டான். (என்
தலைவன்   இராமன்);  எண்ணி - மேலே கூறியவற்றை எல்லாம்
சிந்தித்து;  உனக்கு உறுவது ஒன்று உன்னி - உனக்குத் தக்கது
ஒன்றைக்    கருதி;    துணிந்து    உரை - துணிந்து (எனக்கு)
உரைப்பாயாக; உறுதி பார்க்கின்- உனக்கு உறுதி பயப்பது எனச்
சிந்திப்பாயானால்;துன்று இருங்குழலை விட்டு- நெருங்கியுயர்ந்த
கூந்தலைக்   கொண்ட   சீதா    தேவியினைச்  சிறையிலிருந்தும்
விடுவித்து; தொழுது வாழ்- இராமபிரானை  வணங்கி   (நீ  நீடு)
வாழ்வாயாக; சுற்றத்தோடும்பொன்றுதியாகில் - உன் உறவினர்
அனைவரோடும் (சேர்ந்து) மடிய விரும்பினாய் ஆகில்; என்பின்-
என்னைப்      பின்     தொடர்ந்து;   வாயிலில்    புறப்படு-
இலங்கையரண்மனை வாசலைவிட்டுப் (போர் புரியப்)புறப்படுவாயாக;
என்றான்.
 

(37)
 

7011.

'நீரிலே பட்ட, சூழ்ந்த நெருப்பிலே பட்ட, நீண்ட 

பாரிலே பட்ட, வானப் பரப்பிலே பட்ட, எல்லாம்