| போரிலே பட்டு வீழப் பொருத நீ, "ஒளித்துப் புக்கு, |
| உன் |
| ஊரிலே பட்டாய்" என்றால், பழி' என, உளையச் |
| சொன்னான். |
|
நீரிலே பட்ட - தண்ணீரில் தோன்றியவர்களும்; சூழ்ந்த நெருப்பிலே பட்ட- வளைந்து எரிகின்ற நெருப்பிலே தோன்றிய உயிர்களும்; நீண்ட பாரிலே பட்ட - பரந்த பூமியில் தோன்றிய உயிர்களும்; வானப் பரப்பிலே பட்ட - ஆகாய வெளியிலே தோன்றிய உயிர்களும்; எல்லாம் - ஆகிய எல்லா உயிர்களும்; போரிலே பட்டு வீழ- போர்க்களத்திலே மடிந்து வீழுமாறு; பொருத நீ- போரிட்ட நீ; (இப்பொழுது) உன் ஊரிலே ஒளித்துப் புக்குப் பட்டாய்என்றால்- உன்னுடைய ஊராகிய இலங்கைக்குள் புகுந்து கொண்டு ஒளிந்திருக்கையில் மாண்டாய் என்று சொன்னால்; பழி- உனக்கு அது (பெரும்) பழியாய் முடியும்; என- என்று; உளையச்சொன்னான் - இராவணன் மனம் புண்ணாகுமாறு மொழிந்தான் (அங்கதன்) |
(38) |
இராவணன் அங்கதனை எற்றப் பணித்தல் |
கலிவிருத்தம் |
7012. | சொற்ற வார்த்தையைக் கேட்டலும், தொல் உயிர் |
| முற்றும் உண்பது போலும் முனிவினான், |
| 'பற்றுமின், கடிதின்; நெடும் பார்மிசை |
| எற்றுமின்' என, நால்வரை ஏவினான். |
|
சொற்ற வார்த்தையைக் கேட்டலும்- (இவ்வாறு அங்கதன்) கூறிய வார்த்தைகளைக் கேட்டவுடனே (இராவணன்); தொல் உயிர் முற்றும் - பழமையான உயிர்களையெல்லாம்; உண்பது போலும் முனிவினான் - விழுங்கி விடுவான் போன்ற சினமுடையவனாய்; கடிதின் பற்றுமின் - (இந்தக் குரங்கினை) விரைந்து பிடியுங்கள்; நெடும்பார் மிசை எற்றுமின்- நீண்டு பரந்த பூமியின் மீது மோதுங்கள்; என நால்வரை ஏவினான்- என்று நான்கு பேர்க்கு ஆணையிட்டான். |
(39) |