பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 623

பூசலே-ஏகாரம். தேற்றப் பொருளில் வந்தது. பிரிநிலையுமாம்.
 

(1)
 

7018.

'மற்றும் நின்ற மலையும் மரங்களும்

பற்றி,--வீரர்!--பரவையின் மும் முறை, 

சுற்று கைகளினால், கடி மா நகர் 

சுற்றும் நின்ற அகழியைத் தூர்த்திரால். 

 

மற்றும் - மேலும்; கற்ற கைகளினால் - முன்பே கடலைத்
தூர்த்துப்     பழகிய    கைகளினால்;  வீரர்- வீரர்கள்; நின்ற
மலையும் மரங்களும்
- ஆங்காங்கு  நின்றுள்ள மலைகளையும்
மரங்களையும்;பற்றி- கரங்களால் பிடித்து; பரவையின் -  (சேது
அணையிட்ட போது) கடலில் இட்டதினும்; மும்முறை - மூன்று
மடங்கு மிகுதியாகக் கொணர்ந்து (வீசி);  கடிமாநகர்   சுற்றும்
நின்ற
-    காவல் அமைந்த பெரிய இலங்கை நகரைச்  சுற்றிச்
சூழ்ந்துள்ள;   அகழியைத்       தூர்த்திர்  -  அகழியைத்
தூர்த்திடுங்கள் (எனக் கட்டளையிட்டான் இராமன்)
 

(2)
 

7019.

'இடுமின் பல் மரம்; எங்கும் இயக்கு அறத்

தடுமின்; "போர்க்கு வருக!" எனச் சாற்றுமின்; 

கடுமின், இப்பொழுதே கதிர் மீச்செலாக் 

கொடி மதில் குடுமித்தலைக்கொள்க!' என்றான். 

 

(எங்கும்)   பன்மரம்   இடுமின் - (தெருக்கள்) எங்கும்
மரங்கள் பலவற்றைப் போடுங்கள்; எங்கும் இயக்கறத்தடுமின்
-  (அவ்வாறு இட்டு) அரக்கர்கள் எங்கும் நடமாட இயலாதபடி
தடுத்துவிடுங்கள்;     போர்க்கு   வருக எனச் சாற்றுமின்-
யுத்தத்திற்கு   வாருங்கள்   எனக் கூவியழையுங்கள்;கடுமின் -
விரைவோடு; இப்பொழுதே - இப்போதே; கதிர் மீச் செலா-
சூரியனும்   (நேராகச்) செல்ல இயலாத; கொடுமதில் குடுமித்
தலைக்கொள்க
- வளைந்து செல்லும் மதில்களின் சிகரத்தைக்
கைப்பற்றிக் கொள்ளுங்கள்; என்றான்.
 

இராமன்-தோன்றா எழுவாய். எங்கும் என்பது இடைநிலைத்
தீபமாய் நின்று முன்னும் இணைந்து   பொருள்  தர    நின்றது.
மதில்    குடுமியைக்   கைக்கொள்ளுதல் என்பது அம்மதிலின்
உச்சியில்   ஏறி   நிலைகொள்ளுதல். இதனை, "குடுமி கொண்ட
மண்ணு மங்கலம்" (தொல். புறத். 68)   எனத்   தொல்காப்பியம்
புகலும்.
 

(3)