பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 625

விளையும்   வென்றி -   இதுகாறும்   வெற்றியினையே
விளைவித்துக்    கொண்டிருந்த;   இராவணன் மெய்ப்புகழ் -
இராவணனது உண்மையான புகழை; முளையினோடும் களைந்து
முடிப்பபோல்
  - அடியோடு பறித்து முடிப்பவை போலத்; தளை
அவிழ்ந்த
-  கட்டு அவிழ்ந்த; கொழுந்தடந்தாமரை- வளமான
தாமரைக்  கொடிகளின்;   வளையம்- தண்டின் அடிப்பகுதிகளை;
வானரம்    வன்கையில்   வாங்கின
- குரங்குகள் தம் வலிய
கைகளால் பற்றி எடுத்தன.
 

இலங்கை       மூதூரின்    அகழியில் குரங்குகள் தாமரைக்
கிழங்குகளை   தோண்டியுண்ட   செயல்,   இராவணன்   புகழின்
வீழ்ச்சிக்குத் தொடக்கமாதல் அறிக. தற்குறிப்பேற்ற அணி. தாமரை
வளையம்- தாமரைக்  கிழங்கு.  வட்டமாக  இருப்பதுபற்றி கிழங்கு
வளையம் எனப்பட்டது. இறுதியடி-முற்று மோனை. 
 

(6)
 

7023.

இகழும் தன்மையன் ஆய இராவணன் 

புகழும் மேன்மையும் போயினவாம் என, 

நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால், 

அகழிதானும் அழுவது போன்றதே. 

 

நிகழும் கள் நெடுநீலம் உகுத்தலால் - பெருகுகின்ற தேனை
நீண்ட கருவிளை மலர்கள் சிந்துவதால்; இகழும் தன்மையன் ஆய
இராவணன் -   பழிக்கத்தக்க பண்புடையவனாகிய இராவணனுடைய;
புகழும்  -   (வலிமை மட்டுமின்றி) புகழும்; இன்றோடு போயினது
ஆம் என-  இன்றோடு     போயிற்று   என்று;  அகழி தானும்-
இலங்கையின்   அகழியும்; அழுவது போன்றது- அழுவதைப் போல
இருந்தது.
 

அகழியில் உள்ள   நீலமலர்கள் அகழியின் கண்கள் போன்றன.
அவற்றில்  கள்  நீர்  (தேன்)  வடிவது, இராவணன் வாழ்வு முடியப்
போவதையறிந்து அவை கண்ணீர் விடுவது போன்றிருந்தது  என்றார்.
தன்மைத்     தற்குறிப்பேற்ற  அணி. "தையலும் கணவனும் தனித்து
உறுதுயரம், ஐயமின்றி அறிந்தனபோல, கருமிளையடுத்த   அகழியில்,
கருநெடுங்குவளையும் ஆம்பலும் கமலமும், கண்ணீர் கொண்டு கால்
உற நடுங்க"     (சிலம்பு. 13. 181-88) எனும்  அருமைக்கற்பனையை
அடியொற்றினார். 
  

(7)
 

7024.

தண்டு இருந்த பைந் தாமரை தாள் அற,

பண் திரிந்து சிதைய, படர் சிறை