பக்கம் எண் :

626யுத்த காண்டம் 

வண்டு இரிந்தன; வாய்தொறும் முட்டையைக்

கொண்டு இரிந்தன, அன்னக் குழாம் எலாம்.

 

தண்டு இருந்த பைந்தாமரை- (அகழி தூர்க்கப் படுகையில்)
தண்டுகளோடு இருந்த பசிய  தாமரைக் கொடிகள்; தாள் அற-
வேர் பறிக்கப்பட்டதனால்;  படர்சிறை வண்டு-(அங்கிருந்த) 
விரிந்த சிறகுகளையுடைய வண்டுகள்;   பண்திரிந்து சிதைய
இரிந்தன
-  தம்ரீங்கார  இன்னிசை  நிலைதிரியுமாறு  ஓடின; 
அன்னக் குழாம் எலாம்
- அன்னப் பறவைக் கூட்டங்கள்
எல்லாம்; வாய்தொறும் முட்டையைக் கொண்டு இரிந்தன-
(தம்) வாய்கள் தோறும்  முட்டைகளைக்  கவ்விக்  கொண்டு 
நிலைகெட்டு ஓடின. 
 

(8)
 

7025.

ஈளி தாரம் இயம்பிய வண்டுகள்

பாளை தாது உகு நீர் நெடும் பண்ணைய;

தாள தாமரை அன்னங்கள் தாவிட,

வாளை தாவின, வானரம் தாவவே. 

 

ஈளிதாரம் இயம்பிய வண்டுகள்- இளி, தாரம் எனும் பண்
இசைகளை  இசைக்கும்  வண்டுகளுடன்;  பாலை  தாது  உகு
நெடுநீர்ப்  பண்ணைய
- (தென்னை,  கழுகு  முதலியவற்றின்)
பாளையினுடைய மகரந்தங்கள் சிந்துகின்ற நீரினையுடைய பெரிய
வயல்களில் உள்ள; தாள தாமரை அன்னங்கள்- தாள் உள்ள 
தாமரை மலர்களில் வாழ்கின்ற அன்னங்கள்; தாவிட- தாண்டிச்
செல்லுமாறு; வானரம் தாவ வாளை தாவின- குரங்குகள்
தாவுதலால் வாளை மீன்கள் தாவிக் குதித்தன.
 

இளி-ஈளி  என  நீண்டது-எதுகை  நிறைக்க.  இளி-மந்த
ஓசையுடையது.  தாரம்-எடுத்தல்  ஓசை. "மந்தரம்  மத்திமம்.
தாரம் இவை மூன்றில்"  (கல்லாடம். 21) எனுமிடத்து  இவை
இப்பொருளில் ஆளப்பட்டுள்ளமை காண்க. பூட்டுவிற் பொருள்
கோள். 
 

(9)
 

7026.

தூறு மா மரமும், மலையும் தொடர்

நீறு, நீர்மிசைச் சென்று நெருக்கலான், 

ஏறு பேர் அகழ்நின்றும் எனைப் பல 

ஆறு சென்றன, ஆர்கலிமீதுஅரோ.