பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 627

தூறு மாமரம் - தூறுகள் போல் அடர்ந்த பெரிய மரங்களும்;
குன்றினோடும்  தொடர் நீறும்- மலைகளுடன் தொடர்ந்து
எடுத்த  புழுதியும்;நீர்  மிசைச் சென்று  நெருக்கலான் -
(அகழி) நீர் மேலே சென்று நெருக்குவதால்; ஏறு பேர் அகழ்
நின்று- நீர், மேலே  பொங்கிய   பெரிய     அகழியிலிருந்து;
எனைப்பல- எத்தனையோ பல; ஆறு- ஆறுகள்; ஆர்கலி மீது
சென்றன- கடலை நோக்கிப் பாய்ந்தன.
 

(10)
 

7027.

இழுகு மாக் கல் இடும்தொறு இடும்தொறும்,

சுழிகள்தோறும் சுரித்து இடை தோன்று தேன்

ஒழுகு தாமரை ஒத்தன, ஓங்கு நீர் 

முழுகி மீது எழு மாதர் முகத்தையே.* 

 

இழுகு மாக்கல் -(அகழியைத் தூர்ப்பதற்காக வானரங்கள்)
வீசுகின்ற பெரிய கற்கள்;    இடும்  தொறும் இடும்தொறும்-
(வீசி)   எறியும்தோறும்;  சுழிகள்    தோறும்- (அப்போது
நீரிடையே தோன்றுகின்ற)    நீர்ச்சுழிகளின் நடுவிடந்தோறும்;
சுரித்து-        அழுந்திப்     (பின்);      இடைதோன்று
-அவ்விடத்தே வெளிப்படுகின்ற;தேன் ஒழுகு தாமரை- தேன்
ஒழுகப் பெற்ற தாமரை மலர்கள்;ஓங்குநீர் முழுகி - அலைகள்
எழுகின்ற நீரிலே முழுகி; மீது எழு மாதர் முகத்தை ஒத்தன-
மேலே எழுகின்ற பெண்களின் முகத்தை ஒத்திருந்தன.
 

அகழியில் எழுந்த அலைகளின் அலைக்கழிப்பால், தாமரை
மலர்கள் நீருக்குள் மூழ்கி, மீண்டும் எழுவது குளித்து  எழும்
மாதர் முகங்களைப்   போன்றன என அழகுறக் கற்பித்தார்.
"பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்,  இனமீன் இருங்கழி
ஓதம் மல்குதொறும், கய மூழ்குமகளிர் கண்ணின் மானும்"
(குறந். 9) எனும் குறுந்தொகைப்பாடல் இங்கு ஒப்பு நோக்க
உரியதாகும்.
 

(11)
 

7028.

தன்மைக்குத் தலையாய தசமுகன்

தொன்மைப் பேர் அகழ் வானரம் தூர்த்ததால்; 

இன்மைக்கும், ஒன்று உடைமைக்கும், யாவர்க்கும் 

வன்மைக்கும், ஓர் வரம்பும் உண்டாம்கொலோ?* 

 

தன்மைக்குத்    தலையாய தசமுகன்- தான்  எனும் 
ஆணவப் பண்பிற்குத் தலைவனான பத்துத் தலைகளையுடைய
இராவணனின்;தொன்மைப் பேர்அகழ்-பழமை வாய்ந்த பெரிய