(இலங்கை) அகழியையும்; வானரம் தூர்த்தது- குரங்குகள் தூர்த்து (நிரப்பி) விட்டன; (என்றால்) யாவர்க்கும் - எத்தகையோர்க்கும்; ஒன்று இன்மைக்கும் உடைமைக்கும் - ஒன்றும் இல்லாமையாகிய வறுமைக்கும் எல்லாம் உடைமையாகிய செல்வத்திற்கும்; வன்மைக்கும் - வல்லமைக்கும்; ஓர் வரம்பும் உண்டாம் கொல்? - ஒரு எல்லைகட்ட இயலுமோ? |
உயிரின் ஆதிப் பண்பு, தான் என்பது ஆதலின், ஆணவம் தன்மை எனப்பட்டது. "இங்கு ஆர் எனக்கு நிகர் எனப் பிரதாபித்து இராவணாகாரமாகி" (தாயு. மௌனகுரு. 9) என்று சான்றோர்கள் கூறுமாறு இராவணன் அகங்காரம் பெயர்பெற்ற ஒன்று ஆதலின், "தன்மைக்குத் தலையாய தசமுகன்" என்றார். இப்பாடல் வேற்றுப்பொருள் வைப்பணியாம். |
(12) |
7029. | தூர்த்த வானரம், கள்ளி பறித்து இடை, |
| சீர்த்த பேர் அணைதன்னையும் சிந்தின; |
| வார்த்தது அன்ன மதிலின் வரம்புகொண்டு |
| ஆர்த்த, ஆர்கலி காரொடும் அஞ்சவே. |
|
தூர்த்த வானரம் - அகழியைத் தூர்த்த வானரங்கள்; கள்ளி பறித்து - மராமரங்களைப் பிடுங்கி;இடை சீர்த்த பேரணை தன்னையும் சிந்தின- அகழியின் இடையே (போக்குவரவுக்காகச்) சிறந்திருந்த பெரிய பாலங்களையும் அழித்து விட்டன; வார்த்தது அன்ன- உருக்கி வார்த்தாற்போன்ற; மதிலின் வரம்பு கொண்டு- மதிலின் உச்சியை அடைந்து;ஆர்கலி காரொடும் அஞ்ச- கடலும் கார் முகிலும் அச்சம் கொள்ளுமாறு; ஆர்த்த- முழங்கின. |
வானரம் இட்ட ஆரவாரத்திற்குத்தாம் நிகர் ஆகாமையால் கடலும் மேகமும் அஞ்சும் என்பாராய் "ஆர்கலி காரொடும் அஞ்ச ஆர்த்த" என்றார். |
(13) |
7030. | வட்ட மேரு இது என, வான் முகடு |
| எட்ட நீண்ட மதில்மிசை ஏறி, விண் |
| தொட்ட வானரம், தோன்றின-மீத் தொக |
| விட்ட வெண் கொடி வீங்கின என்னவே. |
|
வட்ட மேரு இது என- வட்ட வடிவம் பெற்ற மேரு மலை இது என்று எண்ணுமாறு; வான்முகடு - ஆகாய உச்சியை; எட்ட- தொடுமாறு; நீண்ட மதில் மிசை- ஏறி-உயர்ந்த மதில்களின் மேல் |