1. கடல் காண் படலம் |
எழுபது வெள்ளம் வானர சேனை சூழ, இராமபிரான் கடலைக் காணுதலும் - பிராட்டியின் நினைவால் வருந்துதலும் - கடலின் தோற்றமும் - மேல்விளைவை எண்ணி இராமபிரான் சிந்தித்தலும் இப்படலத்துள் கூறப்படும் செய்திகளாகும். |
வானரப் படை கடற்கரையை அடைதல் |
6060. | ஊழி திரியும் காலத்தும் உலையா |
| நிலைய உயர் கிரியும், |
| வாழி வற்றா மறி கடலும், மண்ணும், |
| வட பால் வான் தோய, |
| பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் |
| தாழ, பரந்து எழுந்த |
| ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர |
| வெள்ளத்து இறுத்ததால். |
|
வடபால்- வடதிசையின் கண் உள்ள; ஊழி திரியும் காலத்தும்- உலகம் அழியும் பிரளய காலத்திலும்; உலையா நிலைய உயர் கிரியும் - அழியாத தன்மை வாய்ந்த மேருமலையும்; வற்றா மறிகடலும்- என்றும் வற்றாத அலை மடங்கி வரும் கடலும்; மண்ணும் - நிலமும் ; வான் தோய- வானளவ மேல் எழும்படியும்; பாழி தெற்கு உள்ளன கிரியும் - பெரிய தென் திசையிலுள்ள மலைகளும்; நிலனும் தாழ - நிலமும் தாழ்ந்து போகும்படியும்; பரந்து எழுந்த- எங்கும் பரவி எழுந்த; ஏழுபத்தின் பெரு வெள்ளம் - எழுபது வெள்ளம் அளவுடைய வானரசேனை; மகர வெள்ளத்து இறுத்தது- மீன்களை உடைய நீர்மிக்க தென் கடற்கரையை அடைந்தது. |
பாழி-பெருமை; வெள்ளம்-ஒரு பேரெண்; சமுத்திரம் எட்டுக் கொண்டது வெள்ளம் எனப்படும் என்பர். ஆல்:அசை. |
(1) |
6061. | பொங்கிப் பரந்த பெருஞ் சேனை, |
| புறத்தும் அகத்தும், புடை சுற்ற- |