பக்கம் எண் :

4யுத்த காண்டம் 

சங்கின் பொலிந்த தகையாளைப்

பிரிந்த பின்பு, தமக்கு இனம் ஆம்

கொங்கின் பொலிந்த தாமரையின்

குழுவும் துயில்வுற்று இதழ் குவிக்கும்

கங்குல் பொழுதும், துயிலாத

கண்ணன்-கடலைக் கண்ணுற்றான்.

 

பொங்கிப் பரந்த - மிகுந்து பரவிய;பெருஞ்சேனை - பெரிய
படை;புறத்தும் அகத்தும்   புடை சுற்ற- எங்கும் சூழ; சங்கின்
பொலிந்த தகையாளை
- சங்கினாலியளன்ற வளைகளை அணிந்த
தகைமை உடையவளாகிய சீதா பிராட்டியை;பிரிந்த பின்பு- பிரிந்த
பிறகு;தமக்கு இனமாம் - தங்களுக்கு இனமாகிய;    கொங்கில்
பொலிந்த தாமரையின் குழுவும்
-  தேன் மிகுந்த    தாமரைப்
பூக்களின் தொகுதியும்; துயில்வுற்று -  உறங்கி;  இதழ்குவிக்கும்
- இதழ்கள்    குவிந்திருக்கும்;    கங்குல்  பொழுதும் - இரவு
நேரத்திலும்; துயிலாத கண்ணன் - சீதையின்   பிரிவால் வருந்தி
உறங்காத     கண்களை    உடைய     இராமபிரான்;  கடலைக்
கண்ணுற்றான்
- தென் திசைக் கடலைக் கண்டான்.
  

(2)
 

6062.

'சேய காலம் பிரிந்து அகலத்

திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்'

என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும்

முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-

திரையின் பரப்பு அம்மா

 

திரையின் பரப்பு - கடல் அலைகளின் பரப்புகள்;மாயன்
சேயகாலம்   பிரிந்து  
- திருமால் நீண்ட காலம் தம்மைப்
பிரிந்து;அகலத் திரிந்தான் - விலகித் திரிந்தவன்;   மீண்டும்
சேக்கையின் பால்
-மீண்டும் படுக்கைக்கு;  வந்தான்-வந்தான்;
இனி வளர்வான்
- இனி நம்மிடம் உறங்குவான்;என்று கருதி
- என்று நினைந்து;வரும் தென்றல்  - உலவும்     தென்றல்
காற்றானது; தூய மலர்போல்   நுரைத்தொகையும் -  தூய
மலரை ஒத்த வெண்மையான நுரைத்   தொகுதியையும்;முத்தும்
சிந்தி
- முத்துக்களையும் சிந்தி; புடை