சுருட்டி - பக்கத்தே சுருட்டி; பாயல் உதறி- படுக்கையை உதறி; படுப்பதே ஒத்த- விரிப்பதை ஒத்தன. |
அம்மா-வியப்பிடைச்சொல். வளர்தல்-கண்ணுறங்குதல். |
(3) |
6063. | வழிக்கும் கண்ணீர் அழுவத்து |
| வஞ்சி அழுங்க, வந்து அடர்ந்த |
| பழிக்கும் காமன் பூங் கணைக்கும் |
| பற்றா நின்றான் பொன் தோளை, |
| சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் |
| துள்ளும் பொறியின் சுடும், அன்னோ - |
| கொழிக்கும் கடலின் நெடுந் திரைவாய்த் |
| தென்றல் தூற்றும் குறுந் திவலை. |
|
வழிக்கும் கண்ணீர் அழுவத்து - வடிக்கும் கண்ணீர்க் கடலிடையே; வஞ்சி அழுங்க- வஞ்சிக்கொடி போன்ற சீதை வருந்துவதால்; வந்து அடர்ந்த- வந்து பொருந்திய; பழிக்கும் காமன் பூங்கணைக்கும் - பழிக்கும் மன்மதனது மலர் அம்புகளுக்கும்; பற்றா நின்றான் - இலக்காகி நின்ற இராமபிரானுடைய; பொன் தோளை - அழகிய தோள்களை; கொழிக்கும் கடலின் - ஆர்ப்பரிக்கின்ற கடலின்; நெடுந்திரைவாய்- பெரிய அலைகளினின்று கொண்டு; தென்றல் தூற்றும் குறுந்திவலை - தென்றல் காற்று தூற்றும் சிறிய நீர்த்திவலைகள்; சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்- சுழன்று எரிகின்ற கொல்லனது உலையிலிருந்து எழுந்து; துள்ளும் பொறியின் சுடும்- துள்ளி வரும் நெருப்புப் பொறி போலச் சுடும். |
வழிக்கும் - வடிக்கும் அழுவம்-கடல் அழுங்க - வருந்த பற்று-இலக்கு சுழிக்கும்-சுழன்று எரியும் கொழிக்கும் - ஆர்க்கும் வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த பழியாவது "மனைவியைப் பாதுகாக்கத் தவறிவிட்டானே" என்று உலகம் கூறும் பழிச் சொல்லாம். அன்னோ-அந்தோ, இரக்கக் குறிப்பு. |
(4) |
6064. | நென்னல் கண்ட திருமேனி |
| இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்- |
| தன்னைக் கண்டும், இரங்காது |
| தனியே கதறும் தடங் கடல்வாய், |
| பின்னல் திரைமேல் தவழ்கின்ற |
| பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும் |