பக்கம் எண் :

6யுத்த காண்டம் 

 

புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம்

 

பூசாது ஒருகால் போகாதே.

 

நென்னல் கண்ட திருமேனி- நேற்றுப் பார்த்த அழகிய
உடம்பு; இன்று பிறிதாய்- இன்று     வேறுபட்டதாகி; நிலை
தளர்வான் தன்னைக் கண்டும்
- தனது நிலை தளர்பவனாகிய
இராமபிரானது நிலைமையைப் பார்த்தும்;  இரங்காது தனியே
கதறும் தடங் கடல்வாய்
- மனம் இரங்காமல் தனியே நின்று
கதறுகின்ற பெரிய கடலின்கண்; பின்னல்   திரை  மேல் -
பின்னி இணைந்தியங்கும் அலைகளின்மேல்;     தவழ்கின்ற
பிள்ளைத் தென்றல்
-    தவழ்ந்து    வருகின்ற    சிறிய
தென்றலானது; கள் உயிர்க்கும்  -     தேனைப் பிலிற்றும்;
புன்னைக்   குறும்பூ நறுஞ்சுண்ணம்  -    புன்னையினது
சிறியபூவின்    மணமுடைய சுண்ணத்தை; பூசாது ஒரு கால்
போகாது
- இராமன் மீது  ஒரு   காலும்  பூசாமல் போகாது
(பூசியே செல்லும்).
   

நென்னல் -  நேற்று. பிள்ளைத்தென்றல் என்பதற்கேற்பத்
தவழ்ந்து என்று கூறினார். 
 

(5)
 

6065.

சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு

 

உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,

 

நிலை மேற்கொண்டு மெலிகின்ற

 

நெடியோன் தன்முன், படி ஏழும்

 

தலை மேல் கொண்ட கற்பினாள்

 

மணி வாய் என்ன, தனித் தோன்றி,

 

கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும்

 

கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?

 

கொடிப்     பவளம் -    கடற்கரையிலே  படர்ந்துள்ள
கொடிப்பவளம்; சிலை மேல் கொண்ட - வில்லைத்    தாங்கி
இருக்கின்ற; திரு நெடும் தோட்கு- அழகிய நீண்ட தோளுக்கு;
உவமை    மலையும்    சிறிது  ஏய்ப்ப -  மலையும் சிறிது
உவமையாகும்படி; நிலை  மேற்கொண்டு- நிற்கும் நிலையினை
மேற்கொண்டு; மெலிகின்ற நெடியோன்தன் முன்- மெலிகின்ற
நீண்டவனான இராமபிரான்முன்;   படி ஏழும் - ஏழுலகங்களும்;
தலைமேல் கொண்ட கற்பினாள்  -    தலைமேல் கொண்டு
போற்றும்    கற்புடைய சீதா பிராட்டியின்; மணிவாய் என்ன -
அழகிய  வாயைப்போல;தனி தோன்றி- தனியே தோற்றமளித்து;
கொலை