பக்கம் எண் :

 கடல் காண் படலம் 7

மேற்கொண்டு - கொலைத் தொழில் மேற்கொண்டு; உயிர்குடிக்கும்
கூற்றும் கொல்லோ
- அவனது ஆயுளைப் பருகும் எமனோ?
  

தோளின்  இளைப்பு  மலைக்குவமையாம்படி  ஆயிற்று  என்றார்.
 

(6)
 

6066.

'தூரம் இல்லை, மயில் இருந்த

சூழல்' என்று மனம் செல்ல,

வீர வில்லின் நெடு மானம்

வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-

ஈரம் இல்லா நிருதரோடு என்ன

உறவு உண்டு உனக்கு? -ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி,

முத்தே! உயிரை முடிப்பாயோ?

 

முத்தே- முத்தே; மயில்  இருந்த  சூழல்-  மயில்  போன்ற 
சீதாபிராட்டி இருந்த  இடம்;  தூரம்  இல்லை- நெடுந்தூரமில்லை
(அருகில்தான்); என்று  மனம்  செல்ல - என, மனம் நினைத்து
முற்பட; வீரவில்லின்  நெடுமானம்  வெல்ல- வீரச் சிறப்புடைய
வில்லாற்றல்  விளைக்கும் பெரிய மான உணர்வு வென்று மேம்பட;
நாளும்  மெலிவானுக்கு - நாளுக்கு நாள் உடல் மெலிந்து வரும்
இராமனுக்கு; ஏழை மூரல் முறுவல் குறிகாட்டி- சீதாபிராட்டியின்
புன்சிரிப்பு  வெளிப்படும்   பற்களின்   இயல்பைக்காட்டி; உயிரை
முடிப்பாயோ
- இராமனது  உயிரை  முடிக்கப் போகிறாயோ; ஈரம்
இல்லா
- மனத்தில் அன்பு சிறிதும் இல்லாத; நிருதரோடு- அந்த
இலங்கை  அரக்கர்களுடனே;  என்ன  உறவு உண்டு உனக்கு -
உனக்கு என்ன உறவு இருக்கிறது?
   

கடலைக் கண்டவுடனே சீதை இருக்கும் இடம்    பக்கத்தில்தான்
என்று     தெரிந்தும்   -   மனம்    அப்பெருமாட்டியைக்  காண
விரும்பினாலும், தனது தோளாற்றலைக் காட்டிப் பகையை   வென்று
அவளை மீட்ட பிறகே காண முற்படவேண்டும் என்ற மான உணர்வு
தடை செய்து அடக்க, நாளும் மெலிபவனாகிய வீர வில்லி  என்றார்.
நிருதர்  வருத்துவது  போல,  முத்தே  நீயும்  இராமனை  வருந்தச்
செய்கிறாய் அதனால் நிருதரோடு உறவுடையை போலும் என்றான்.
   

 (7)
 

6067.

'இந்து அன்ன நுதல் பேதை

இருந்தாள், நீங்கா இடர்; கொடியேன்