| தந்த பாவை, தவப் பாவை, |
| தனிமை தகவோ?' எனத் தளர்ந்து, |
| சிந்துகின்ற நறுந் தரளக் கண்ணீர் |
| ததும்பி, திரைத்து எழுந்து, |
| வந்து, வள்ளல் மலர்த் தாளின் |
| வீழ்வது ஏய்க்கும்-மறி கடலே. |
|
மறிகடல்- மடிந்து எழும் அலைகளை உடைய கடலே! இந்து அன்ன நுதல் பேதை - பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி உடைய சீதை; இடர் நீங்கா இருந்தாள் - நீங்காத துன்பத்திலே இருந்தாள்; கொடியேன் தந்த பாவை- கொடியேனாகிய நான் பெற்ற பாவை போன்றவரும்; தவப் பாவை - தவப் பயனால் பிறந்த வருமாகிய சீதை; தனிமை தகவோ? - (அரக்கருக்கிடையே தனி இருந்து வருவது தகுமோ? எனத் தளர்ந்து - என்று மனம் தளர்ந்து; சிந்துகின்ற நறுந்தரளம் - சிந்துகின்ற நல்ல முத்துக்க ளாகிய; கண்ணீர் ததும்பி - கண்ணீர் பொங்கி திரைத்து எழுந்து வந்து- அலைகளாகிய கைகளை விரித்துக் கொண்டு எழுந்து வந்து; வள்ளல் மலர்த் தாளில்- வள்ளலாகிய இராமபிரானது மலர்போன்ற திருவடிகளில்; வீழ்வது ஏய்க்கும் - விழுந்து முறையிடுவதை நிகர்க்கும். |
பாற்கடலில் பிறந்த திருமகளே சீதையாதலால் கடல் 'கொடியேன் தந்த பாவை' எனக் கூறியது. தன் மகள் துயரத்தால் வருந்தக் கண்டும் தான் எதுவும் செய்ய இயலாமையைச் சுட்ட 'கொடியேன்' எனக் கூறியது பொருத்தமே. தரளக் கண்ணீர் உருவகம். இந்து-பிறைச்சந்திரன் இது முதல் மூன்று பாடல்கள் கடலின் தோற்றத்தை விவரிப்பவையாம். |
(8) |
6068. | பள்ளி அரவின் பேர் உலகம் |
| பசுங் கல் ஆக, பனிக் கற்றைத் |
| துள்ளி நறு மென் புனல் தெளிப்ப, |
| தூ நீர்க் குழவி முறை சுழற்றி, |
| வெள்ளி வண்ண நுரைக் கலவை, |
| வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு |
| அள்ளி அப்ப, திரைக் கரத்தால் |
| அரைப்பது ஏய்க்கும்-அணி ஆழி. |