பக்கம் எண் :

 கடல் காண் படலம் 9

அணி  ஆழி  -  அழகிய  அந்தக்   கடல்;   வெதும்பும்
அண்ணல்
  திருமேனிக்கு  - (சீதையின்  பிரிவால்)  வெதும்பும்
இராமன் திருமேனியில்  (அந்த  வெப்பம் தீர);  அள்ளி  அப்ப-
அள்ளிப்    பூசுவதற்காக;    பள்ளி   அரவில்    பேருலகம்-
திருமாலின்  படுக்கையாகிய  பாம்பின்  முடிமீது   தங்கிய பெரிய
உலகமே;   பசும்   கல்லாக - சந்தனம்  அரைக்கும்  கல்லாக;
பனிக்கற்றைத்    துள்ளி    நறுமென்   புனல்   தெளிப்ப
-
திரண்ட  பனித்துளிகளாகிய   மெல்லிய   நீரைத் தெளித்த; தூநீர்
குழவி முறை சுழற்றி 
- தூய   நீராகிய   குழவியை  முறையே
சுழற்றி;    வெள்ளி வண்ண நுரைக  கலவை  -  வெண்ணிறம்
கொண்ட    நுரையாகிய    சந்தனத்தை;    திரைக்  கரத்தால்-
அலைகளாகிய  கைகளால்;  அரைப்பது ஏய்க்கும் - அரைப்பது
போலத் தோன்றும்.
    

கடல் - சந்தனம்  அரைப்பவன், அலைகள் - கைகள் உலகம்
- சந்தனம்  அரைக்கும் கல், பனி -  நீர் தெளிப்பவன், பனித்துளி
- நீர்த்துளி மறிந்துவரும் கடல்  நீர்  - குழவி;  நுரை - கலவைச்
சந்தனம்   என  உருவகித்திருப்பது  சுவைத்து   மகிழ்தற்குரியது
பள்ளி அரவு-ஆதி சேடன்.
  

(9)
 

6069.

கொங்கைக் குயிலைத் துயர் நீக்க,

இமையோர்க்கு உற்ற குறை முற்ற,

வெங் கைச் சிலையன், தூணியினன்,

விடாத முனிவின் மேல்செல்லும

கங்கைத் திரு நாடு உடையானைக்

கண்டு, நெஞ்சம் களி கூர,

அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி,

ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி.

 

அணி ஆழி- அந்த அழகிய கடல்;  கொங்கைக்  குயிலை-
மார்பகங்களை  உடைய குயில் போன்றவளான சீதா  பிராட்டியை;
துயர்  நீக்க
-அவளுக்கு  நேர்ந்த    துன்பத்தைப்   போக்கவும்;
இமையோர்க்கு
   -  தேவர்களுக்கு;   உற்ற   குறை    முற்ற-
உண்டான    குறையை    முடித்து    வைக்கவும்;   வெங்கைச்
சிலையன்
  - கையிலே பகைவர்க்குப் பயத்தைத்  தோற்றுவிக்கும்
வில்லைப்  பிடித்தவனாய்;  தூணியினன் - அம்பறாத்தூணியையும்
தாங்கியவனாய்; விடாத முனிவின்   மேற்செல்லும்  - நீங்காத
கோபத்தோடு பகைவர் மேற்செல்லும்; கங்கைத் திருநாடு