எரியுண்ட இலங்கையை மயன் புதுப்பித்தலும், இராவணன் ஆலோசனை மண்டபத்தில் வீற்றிருத்தலும், முனிவர் முதலியோரை விலக்குவதும், எல்லாத்திசைகளிலும் வீரர்களைக் காவலுக்கு நிறுத்துவதும், இராவணன் பேசுவதும், படைத்தலைவர் பேசுவதும், கும்பகருணன் கூற்றும், அதற்கு இராவணன் இசைவதும், இந்திரசித்து 'வென்று வருவேன்' என்று கூறுவதும், அவன் கூற்றைக் கண்டித்து வீடணன் பேசுவதும்-வீடணன் இராவணனுக்கு மேலும் சில உறுதி மொழிகளைக் கூறுவதும் இராவணன் மறுமொழியும் வீடணன் இரணியனது சரிதம் கூறத் தொடங்குவதும் இப்படலத்துள் கூறப்பட்டுள்ள செய்திகளாகும். |