பக்கம் எண் :

12 யுத்த காண்டம்

மண்ணுலகு, கீழ்உலகு என்பனவாம். முற்றுற-முற்றும் உற என்பதன்
உம்மை தொக்கது. நிரம்ப என்றுமாம். வான்மீகத்தில் இலங்கையை
மீண்டும் அமைத்தது கூறப்படவில்லை. நினைத்த நினைப்பால்
படைத்தல் வல்லவன் தெய்வதச்சன் என்பதால் 'கணத்தின்
இயற்றினன்' என்றார்.

(1)

இராவணன் சினம் நீங்குதல்

6072.

பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை

நல் நகர் நோக்கினான், நாகம் நோக்கினான்,
'முன்னையின் அழகு உடைத்து!' என்று, மொய் கழல்

மன்னனும், உவந்து, தன் முனிவு மாறினான்.

மொய்கழல் மன்னன் - வீரக்கழலணிந்த இராவணன்;
பொன்னினும் மணியினும் அமைந்த பொற்புடை
- பொன்னாலும் மணிகளாலும் அமைக்கப்பட்ட அழகுடைய;
நல்நகர் நோக்கினான்
- நல்ல நகராகிய இலங்கையைப்
பார்த்தான்; நாகம் நோக்கினான் - தேவர் தலைநகராகிய
அமராவதியைப் பார்த்தான்; முன்னையின் அழகுடைத்து-
முன்பிருந்ததை விடவும் அழகுடையதாய் அமைந்துள்ளது; என்று
உவந்து
- என்று கூறி மகிழ்ந்து; தன் முனிவு மாறினான்-
கோபம் நீங்கினான்;

மொய்கழல் - கால்களில் செறிந்த வீரக்கழல். "மன்னனும்
நகர் நோக்கினான் முனிவு மாறினான்" என இயையும். முனிவு-
அனுமன் இலங்கையை எரித்ததால் எழுந்த கோபம். நாகம்-
விண்ணுலகம் இங்கு ஆகுபெயராய் அமராவதியை உணர்த்தியது.
'நாகம் நோக்கினான் நல்நகர் நோக்கினான்' என்றது அமராவதியை
இலங்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதனிலும் இலங்கை அழகு
மிக்கது என்று அறிந்து மகிழ்ந்தான் என்பது கருத்து.

(2)

6073.

முழுப் பெருந் தனி முதல் உலகின் முந்தையோன

எழில் குறி காட்டி நின்று, இயற்றி ஈந்தனன்;-

பழிப்ப அரும் உலகங்கள் எவையும் பல் முறை
அழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது
உண்டாகுமோ?  

முழுப்பெரும் தனி முதல் - முழுமையான பெரிய ஒப்பற்ற
தலைவனும்; உலகின் முந்தையோன் - உலகம் தோன்றுவதற்கு
முன்னமே தோன்றியவனுமான பிரமதேவன்; எழிற்குறி காட்டி