பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 13

நின்று - அழகுக்குரிய  நெறி  முறைகளை மயனுக்குக் காட்டி நின்று;
இயற்றி   ஈந்தனன்
  -  அந்த   மயனால்   இலங்கையை  அழகுற
அமைக்கச்  செய்து  தந்தான்;  பழிப்பரும்  உலகங்கள் எவையும்
- பழித்தற்கரிய  உலகங்கள்  எல்லாவற்றையும்;  பன்முறை அழித்து
அழித்து  ஆக்குவாற்கு
- பல  முறையும்  அழித்துப்   படைக்கும்
திறமுடைய  பிரமனுக்கு; அரிது உண்டாகுமோ? - செய்தற்கு அரிய
செயல் எதுவும் உண்டோ? (இல்லை என்பது கருத்து)
    

உலகங்கள்  எல்லாவற்றையும்  படைப்பவன்  ஆதலால்  'முழுப்
பெரும்  தனிமுதல்'  என்றார்.   உலகம்  தோன்றுவதற்கு   முன்னே
தோன்றியவன்  என்பதால்  'உலகின்  முந்தையோன்' என, பிரமனைச்
சிறப்பித்தார். எழிற்குறி-அழகுக்குரிய வரையறை. இலங்கை எழிலுக்குக்
காரணம்  உலகின்  முந்தையோனான   பிரமனே   மயனுக்கு   எழிற்
குறிகாட்டி  இயற்றச்  செய்ததே.  இப்பாடலைக்  கவிக்கூற்று என்பர்;
இராவணன் கூற்று எனினும் பொருந்தும்.

(3)
 

இராவணன் பிரமனைப் பூசித்து அனுப்புதல்
 

6074.

திரு நகர் முழுவதும் திருந்த நோக்கிய,
பொரு கழல், இராவணன் அயற்குப் பூசனை

 

வரன்முறை இயற்றி, 'நீ வழிக்கொள்வாய்' என்றான்-

 

அரியன தச்சற்கும் உதவி, ஆணையால்.
 

திருநகர் முழுவதும் - அழகிய இலங்கை  மாநகர்  முழுவதையும்;
திருந்த  நோக்கிய  பொருகழல்   இராவணன் - திருத்தமுற  நன்கு
நோக்கிய  வீரக்கழலணிந்த  கால்களை  உடைய  இராவணன்; அயற்கு
பூசனை   வான்முறை   இயற்றி 
-  பிரமனுக்குச்   செய்யவேண்டிய
வழிபாடுகளை முறைப்படி செய்து;அரியன  தச்சற்கும்  ஆணையான்
உதவி
- தெய்வத்  தச்சனாகிய  மயனுக்கும் அரிய பல பொருள்களைத்
தனது  ஆணையால்  தந்து;  நீ  வழிக்கொள்வாய்  என்றான் -  நீ
உன்னிருப்பிடத்துக்குச் செல்வாயாக என்று கூறி வழியனுப்பினான்.
   

பொருகழல் - பொருந்திய கழல். தச்சன் - மயன். வழிக்கொள்ளுதல்
-செல்லுதல். திருந்த  நோக்குதல் - நன்றாகப்  பார்த்தல்  வான்முறை -
முறைப்படி.
  

(4)
 

இராவணன் ஆலோசனை மண்டபத்தில் அமர்தல்
 

6075.

அவ் வழி, ஆயிரம் ஆயிரம் அவிர

 

செவ் வழிச் செம் மணித் தூணம் சேர்த்திய