| அவ் எழில் மண்டபத்து, அரிகள் ஏந்திய |
| வெவ் வழி ஆசனத்து, இனிது மேவினான். |
|
அவ்வழி - அதன் பின்னர்; ஆயிரம் ஆயிரம் - ஆயிரம் ஆயிரமாக (பல்லாயிரக்கணக்காக); அவிர் செவ்வழிச் செம்மணி- ஒளி விளங்குகின்ற செம்மையான மாணிக்கத்தால் ஆகிய; தூணம் சேர்த்திய - தூண்கள் அமைந்த; அவ்வெழில் மண்டபத்து- அவ்வழகிய மண்டபத்திலே; அரிகள் ஏந்திய- சிங்கங்கள் சுமந்த; வெவ்வழி ஆசனத்து - விரும்பத்தகும் தன்மையுடைய அரியணையிலே; இனிது மேவினான் - (இராவணன்) இனிது வீற்றிருப்பானானான். |
வெம்மை - வேண்டுதல், விரும்புதல். அவிர்தல் - ஒளி வீசுதல். |
(5) |
இராவணன் அமைச்சர் சூழ அமர்ந்திருத்தல் |
6076. | வரம்பு அறு சுற்றமும், மந்திரத் தொழில |
| நிரம்பிய முதியரும், சேனை நீள் கடல் |
| தரம் பெறு தலைவரும், தழுவத் தோன்றினான்- |
| அரம்பையர் கவரியோடு ஆடும் தாரினான். |
|
அரம்பையர் - அரம்பையர் முதலிய தேவ மாதர்கள் வீசும்; கவரியோடு ஆடும் தாரினான் - கவரியோடு ஆடும் மாலையை அணிந்தவனாகிய இராவணன்; வரம்பு அறு சுற்றமும் - எல்லையில்லாத சுற்றத்தவர்களும்; மந்திரத் தொழில் நிரம்பிய முதியரும் - மந்திராலோசனையில் வல்ல வயது முதிர்ந்த அமைச்சர்களும்; சேனை நீள் கடல் தரம் பெறு தலைவரும் - சேனையாகிய பெரிய கடல் நடத்தும் தகுதி மிக்க தானைத்தலைவர்களும்; தழுவத் தோன்றினான் - தன்னைச் சூழ்ந்திருக்க, விளங்கினான். |
மந்திரம்-ஆலோசனை. தரம்-தகுதி (மேன்மையும் ஆம்) அரம்பையர் கவரி வீசுதல் இராவணனுக்குச் செய்யும் உபசாரமாம். கவரி அசைய இராவணன் மார்பிலணிந்திருந்த மாலையும் அசைந்தது. |
(6) |
6077. | 'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர |
| எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான், |