மண்டபத்துக்குள் வாராதபடி தடை விதித்தான்; (அதன் பின்) பண்டிதர் - கல்வி மேம்பாடுடைய அறிஞர்களும்; பழையவர்- நீண்ட நாள்கள் பழகிய பழமையோரும்; கிழவர் - நெருங்கிய உறவுடைய சுற்றத்தினரும்; பண்பினர் - நல்ல பண்புடைய நட்புடையவர்களும்; தண்டல் இல் மந்திரத் தலைவரும் - தன்னைப் பிரிந்து என்றும் நீங்குதல் இல்லாத நல்ல ஆலோசனைகளைக் கூற வல்ல அமைச்சர்களும்; சார்க என- மந்திராலோசனை மண்டபத்துக்கு வருக என்றுகூறி; கொண்டு உடன் இருந்தனள் - அவர்களை உடன் கொண்டு அமர்ந்தான். |
கிழவர் - நெருங்கிய உறவினர். கொற்ற ஆணை - வெற்றி தரும் கட்டளையாம். |
(8) |
6079. | ஆன்று அமை கேள்வியர் எனினும், ஆண்தொழிற்கு |
| ஏன்றவர் நண்பினர் எனினும், யாரையும், |
| வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர |
| போன்றவர் அல்லரை, புறத்துப் போக்கினான். |
|
வான் துணைச் சுற்றத்து- தனக்கு நல்ல துணையாக இருக்கும் சுற்றத்தினருள்ளும்; ஆன்றமை கேள்வியரெனினும் - நிறைந்த கல்வி கேள்வியுள்ளவர்கள் என்றாலும்;ஆண் தொழிற்கு ஒன்றவர் நண்பினர் எனினும் - ஆண்மைத் தொழில் செய்வதற்குரிய நட்புடையவர் என்றாலும்; மக்கள், தம்பியர் போன்றவர் அல்லரை - தனது மக்கள் தம்பிமார்கள் போன்றவர் அல்லாதாரை; யாரையும் - வேறு எவரையும்; புறத்துப் போக்கினான் - அந்த மண்டபத்தை விட்டு வெளியே போகச் செய்தான். |
இராவணன் என்ற எழுவாய் வரவழைத்துப் பொருள் கொள்ளப்பட்டது. ஆன்று - நிறைந்து அமை - பொருந்திய ஆண்தொழில் -போர்த்தொழில் என்றவர் - ஏற்றவர் (தகுதி உள்ளவர்) 'யாவரையும்' என்றது யாரையும் எனநின்றது விகாரம். |
(9) |
6080. | திசைதொறும் நிறுவினன், உலகு சேரினும் |
| பிசை தொழில் மறவரை; பிறிது என் பேசுவ- |
| விசையுறு பறவையும், விலங்கும், வேற்றவும், |
| அசைதொழில் அஞ்சின, சித்திரத்தினே? |
|
உலகு சேரினும்- எல்லா உலகங்களிலும் உள்ளவர் எல்லோரும் எதிர்த்து வந்தாலும்; பிசை தொழில் மறவரை - |