பக்கம் எண் :

 இராவணன் மந்திரப் படலம் 17

பிசைந்து ஒழிக்க வல்ல வீரர்களை; திசை தொறும் நிறுவினன் -
எல்லாத  திசைகளிலும்   நிறுத்தி   வைத்தான்;   விசை   உறு
பறவையும்
-  (அதனால்)  விரைந்து   செல்லும்   பறவைகளும்;
விலங்கும்  
-   மிருகங்களும்;   வேற்றவும்  -  மற்றவையும்;
சித்திரத்தினே
- சித்திரத்தில் உள்ளவை போல; அசை தொழில்
அஞ்சின
- சிறிதே  அசைவதற்கும் அஞ்சினவாயின; பிறிது என்
பேசுவ 
- (என்றால்) வீரர்களின் காவல் திறத்தை   வேறு  என்ன
பேசுவதற்கிருக்கிறது.
 

"வேற்றவும்"  என்பது பறவையும்,  விலங்கும் அல்லாத மானிடர்
முதலியவர்களை.  பேசுவ - பேசுவது  என்னும்   பொருளுடையது.
சித்திரத்தினே  - சித்திரத்தைப்   போல  'இன்' உவமைப் பொருள்
தந்து நின்றது.
 

(10)
 

இராவணன் உரை
 

6081.

'தாழ்ச்சி இங்கு இதனின்மேல் தருவது ஏன், இனி?

 

மாட்சி, ஓர் குரங்கினால் அழிந்த, மாநகர்;

 

ஆட்சியும், அமைவும், என் அரசும் நன்று!' எனா,

 

சூழ்ச்சியின் கிழவரை நோக்கிச் சொல்லுவான்:
 

மாட்சி  ஓர்  குரங்கினால் அழிந்த மாநகர் - (இராவணன்)
எனது பெருமை  ஒரு குரங்கினால் சிறந்த இலங்கை நகர் அழிந்தது
என்றால், இதனின்   மேல் - இதை  விடவும்;  இங்கு தாழ்ச்சி
தருவது இனி என்
-  இங்கு  எனக்கு  தாழ்வைத்தருவது  வேறு
என்ன இருக்கிறது? ஆட்சியும் அமைவும் என்  அரசும் நன்று
- எனது  ஆட்சி பலமும் அமைந்துள்ள  தகுதியும்  எனது  அரச
பதவியும்     நன்றாயிருக்கிறது!   எனா, சூழ்ச்சியின்  கிழவரை
நோக்கிச்   சொல்லுவான் 
-  என்று  தனது  அமைச்சர்களை
நோக்கிக் கூறுவானாயினான்.
  

ஆட்சி - ஆட்சி  புரியும்  திறம்.  அமைவு-பொருந்திய சிறப்பு
அரசு - அரச  பதவியை   உணர்த்தும்.    சூழ்ச்சியின்   கிழவர் -
ஆலோசனையில்  வல்ல அமைச்சர்கள்.
 

(11)
 

6082.

'சுட்டது குரங்கு; எரி சூறையாடிடக்

 

கெட்டது, கொடி நகர்; கிளையும் நண்பரும்

 

பட்டனர்; பரிபவம் பரந்தது, எங்கணும்;

 

இட்டது இவ் அரியணை இருந்தது, என் உடல்.