பக்கம் எண் :

18யுத்த காண்டம் 

குரங்கு சுட்டது - ஒரு குரங்கு சுட்டது;எரி சூறை ஆடிட -
நெருப்பு  சூறையாட (கொள்ளை கொள்ள); கொடி நகர் கெட்டது
- கொடிகள் கட்டப்பட்டுள்ள   இலங்கை   மாநகரமே   அழிந்தது;
கிளையும்  நண்பரும்  பட்டனர்
- உறவினர்களும், நண்பர்களும்
இறந்தனர்; பரிபவம்  எங்கணும் பரந்தது - அவமானம்  எங்கும்
பரவியது;இட்டது   இவ்வரியணை - இங்கு   இடப்பட்ட  இந்தச்
சிங்காதனத்திலே; என்  உடல்  இருந்தது - (நேர்ந்த  தீமையைத்
தடுக்க இயலாத) எனது உடல் (பலனின்றி) இருந்தது.
 

எரி - நெருப்பு. சூறையாடல்  - கொள்ளை இடுதல். பரிபவம் -
அவமானம்.
 

(12)
 

6083.

'ஊறுகின்றன கிணறு உதிரம்; ஒண் நகர்
ஆறுகின்றில தழல்; அகிலும் நாவியும்
கூறு மங்கையர் நறுங் கூந்தலின் சுறு
நாறுகின்றது; நுகர்ந்திருந்தம், நாம் எலாம்.
 

கிணறு  உதிரம்  ஊறுகின்றன  - இலங்கை மாநகரில் உள்ள
கிணறுகளில்  நீருக்குப்  பதிலாக  இரத்தம் ஊறுகின்றன; ஒள் நகர்
அழல்   ஆறு    கின்றில
- (இலங்கையில் அனுமன் வைத்த) தீ
இன்னும்     ஆறவில்லை; அகிலும் நாவியும் கூறும் -  அகிலும்,
கத்தூரியும்     கமழ்வது     என்று    கூறுகின்ற;     மங்கையர்
நறுங்கூந்தலின்
-  இலங்கை வாழ் பெண்களின் மணம் மிக்க கூந்தல்
யாவும்;  சுறு  நாறுகின்றது -  சுறு   நாற்றம்  நாறுகின்றது;  நாம்
எலாம்   நுகர்ந்து   இருந்தம்
-  அதனை  நாம்   எல்லோரும்
அனுபவித்து இருந்தோம்.
    

சுறு நாற்றம்-கூந்தலில் நெருப்புப் பிடிப்பதால் எழும் துர்நாற்றம்.
இருந்தம்   - இருந்தோம். தன்மைப்பன்மை வினைமுற்று. ஒள் நகர்-
ஒளி  பொருந்திய நகரம்  (இலங்கை)  அகில் -அகிற்புகை.   நாவி-
கஸ்தூரிக் கலவை.
   

(13)
 

6084.

'மற்று இலது ஆயினும், "மலைந்த வானரம்

 

இற்று, இலதாகியது" என்னும் வார்த்தையும்

 

பெற்றிலம்; பிறந்திலம் என்னும் பேர் அலால்,

 

முற்றுவது என்? இனி, பழியின் மூழ்கினாம்!'
 

மற்று  இலது  ஆயினும்- வேறு எதுவும் நாம் செய்யவில்லை
எனினும்,மலைந்த  வானரம் - இங்கு  வந்து போர் செய்த  ஒரு
குரங்கு (அனுமன்) இற்று இலதாகியது- செத்து ஒழிந்து போயிற்று;