என்னும் வார்த்தையும் பெற்றிலம்- எனப் பிறர் கூறும் பேச்சைக் கூடக் கேட்கப் பெற்றிலோம்;பிறந்திலம் என்னும் பேர் அலால் - பிறந்தும் பிறவாதவரானோம் என்ற பெயரைத்தவிர, பழியின் மூழ்கினோம் - பழியாகிய கடலிலே மூழ்கி விட்ட நாம்; இனி முற்றுவது என் - இனி என்ன செய்து முடிக்கப் போகிறோம். |
ஒரு குரங்கை ஏவி, நமக்குத் தீமை விளைவித்த பகைவர் வாழும் இடம் சென்று வென்று வரவில்லை என்றாலும் என்பான், 'மற்றிலதாயினும்' என்றான். முற்றுதல்-செய்து முடித்தல். மலைதல்- போர் செய்தல். |
(14) |
படைத்தலைவன் கூற்று |
6085. | என்று அவன் இயம்பலும், எழுந்து இறைஞ்சினான், |
| கன்றிய, கருங் கழல், சேனை காவலன்; |
| 'ஒன்று உளது உணர்த்துவது; ஒருங்கு கேள்!' எனா, |
| நின்றனன், நிகழ்த்தினன், புணர்ப்பின் நெஞ்சினான்: |
|
என்று அவன் இயம்பலும்- என்று இராவணன் கூறவும்;கன்றிய - இராவணனுடைய பேச்சினால் வருந்திய; சேனை காவலன் - படைத்தலைவனான பிரகத்தன்; புணர்ப்பின் நெஞ்சினான் - சூழ்ச்சி மனமுடையவனுமாகிய அவன்; எழுந்து இறைஞ்சினான் - எழுந்து இராவணனை வணங்கி; ஒன்று உளது உணர்த்துவது - உனக்குத் தெரிவிப்பது ஒன்று உண்டு; ஒருங்கு கேள் எனா - அதை முழுவதும் கேட்பாயாக என்று கூறி; நின்றனன் நிகழ்த்தினன் - நின்று கூறுவானானான். |
படைத்தலைவன் ஆதலால் முதலில் பேசினான். பிரகத்தன் என்பது அவன் பெயர். கருங்கழல் - வலிய வீரக்கழல். புணர்ப்பு- சூழ்ச்சி. கன்றுதல் -மனம் வருந்துதல். ஒருங்கு-முழுவதும். |
(15) |
6086. | ' "வஞ்சனை மனிதரை இயற்றி, வாள் நுதல், |
| பஞ்சு அன மெல் அடி, மயிலைப் பற்றுதல் |
| அஞ்சினர் தொழில்" என அறிவித்தேன்; அது |
| தஞ்சு என உணர்ந்திநிலை-உணரும் தன்மையோய்! |
|
உணரும் தன்மையோய் - நன்மை தீமைகளை உணரும் தன்மை உடையவனே! மனிதரை வஞ்சனை இயற்றி - மானிடர்களான இராம, இலக்குவர்களை வஞ்சித்து;வாள் நுதல் - |