பக்கம் எண் :

20யுத்த காண்டம் 

-  ஒளி  பொருந்திய  நெற்றியையும்;பஞ்சு  அன  மெல்லடி மயிலை-
செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மெல்லிய பாதங்களையும் உடைய மயில்
போன்ற  சீதாபிராட்டியை;  பற்றுதல்  - கவர்ந்து வருதல்; அஞ்சினர்
தொழில் என
- அம்மனிதர்களுக்குப் பயந்தவர்கள் செய்யும்  காரியம்
என்று;  அறிவித்தேன்  - முன்பே  தெரிவித்தேன்; அது தஞ்சு என
உணர்ந்த நிலை
    -   அது   ஏற்றுக்கொள்ளத்தக்கது   என்று   நீ
உணரவில்லை.
 

உணரும்   தன்மை - நல்லதும்,  கெட்டதும்  தெரிந்து  கொள்ளும்
தன்மை என்பதைக் குறித்தது.
 

(16)
 

6087.

'கரன் முதல் வீரரைக் கொன்ற கள்வரை,
விரி குழல் உங்கை மூக்கு அரிந்த வீரரை.
பரிபவம் செய்ஞ்ஞரை, படுக்கலாத நீ,
"அரசியல் அழிந்தது" என்று அயர்தி போலுமால்.
 

கரன்  முதல்  வீரரை  -  கரன், தூடணன், திரிசிரா முதலிய
வீரர்களை;  கொன்ற   கள்வரை  -  கொன்றழித்த கள்வர்களும்;
விரிகுழல் உங்கை
- விரிந்த  கூந்தலை  உடைய நின் தங்கையான
சூர்ப்பனகையினது;  மூக்கு   அரிந்த  வீரரை - மூக்கை அறுத்து
பங்கப்படுத்திய   வீரர்களும்   ஆகிய;   பரிபவம்  செய்ஞ்ஞரை
- உன்னை அவமானப்படுத்திய அந்த மானிடர்களை;படுக்கலாத நீ-
(கொன்று ஒழித்திருக்க வேண்டும்)   இதுவரையும்   கொன்றழிக்காத
நீ; அரசியல் அழிந்ததென்று -  அரசியல்  அழிந்து  போனதென்று;
அயர்தி போலும்
- சோர்வடைகிறாய் போலும்.
 

முதல்   மூன்று    வரிகளில்  இராமன் இலக்குவர் செய்த தீமை
பெரிதென்பதைக் கூறி,  அவர்கள்  கொல்லப்பட  வேண்டியவர்களே
என  விளக்கினான்.  தவ வேடத்துக்குச் சிறிதும் பொருந்தாத செயல்
செய்தவரென்பதால் 'கள்வர்' என்றான். 'விரிகுழல் உங்கை' என்பதால்
சூர்ப்பனகை  ஏற்கனவே  கணவனை  இழந்தவள் என்பது  குறித்தது.
அவர்கள்    இருக்குமிடம்    சென்று     அழிக்காமல்   அரசியல்
அழிந்தது என்று கூறிச் சோர்வடைதல் தகுமோ என்றான்.
 

(17)
 

6088.

'தண்டம் என்று ஒரு பொருட்கு உரிய தக்கரைக்
கண்டவர், பொறுப்பரோ, உலகம் காவலர்?
வண்டு அமர் அலங்கலாய்! வணங்கி வாழ்வரோ,
விண்டவர் உறு வலி அடக்கும் வெம்மையோர்?