வண்டு அமர் அலங்கலாய்- வண்டுகள் தங்கியிருக்கும் மலர் மாலை அணிந்த (வெற்றி மாலையை உணர்த்தும்) தண்டம் என்று ஒரு பொருட்கு- தண்டனை என்ற ஒரு செயலுக்கே; உரிய தக்கரை - உரியவர்களான கள்வர்களை (ராமலக்குவரை) உலகம் காவலர் - நாடாளும் மன்னர்கள்; கண்டவர் பொறுப்பரோ - பார்த்தும் அவர்களைப் பொறுத்துக் கொள்வார்களோ; விண்டவர் உறு வலி - பகைவர்களின் மிகுந்த வலிமையை; அடக்கும் வெம்மையோர் - அடக்கும் வலிமை உடையவர்கள்;வணங்கி வாழ்வரோ - அப்பகைவரை வணங்கி வாழ்வார்களோ? (வாழமாட்டார்கள்). |
தண்டம் - தண்டனை. தக்கர்-கள்வர். வெம்மை-ஆற்றல் வலிமையுமாம் என்பது கருத்து. |
(18) |
6089. | 'செற்றநர், எதிர் எழும் தேவர், தானவர், |
| கொற்றமும் வீரமும் வலியும் கூட்டு அற, |
| முற்றி மூன்று உலகுக்கும் முதல்வன் ஆயது. |
| வெற்றியோ? பொறைகொலோ? விளம்ப |
| வேண்டுமால். |
|
செற்றனர் எதிர் எழும் - சினம் கொண்டவர்களாக எதிர்த்துப் போருக்கு எழுந்து வரும்; தேவர், தானவர் - தேவர்களையும், அசுரர்களையும்;கொற்றமும் வீரமும் வலியும் - அவர்களின் வெற்றியும், வீரமும், வலிமையும்; கூட்டு அற முற்றி - ஒரு சேர அழியச் செய்து முடித்து; மூன்று உலகுக்கும் - விண்ணுலகம், மண்ணுலகம், கீழுலகம் ஆகிய மூன்று உலகங்களுக்கும்; முதல்வன் ஆயது - நீயே (ஒப்பற்ற) தலைவனாக ஆனது;வெற்றியோ - பகைவர் மேல் படை எடுத்துச் சென்ற வெற்றியினாலா? பொறை கொலோ - பொறுத்திருந்ததாலா? விளம்ப வேண்டும் - நீயே கூறுவாயாக. |
செற்ற-சினந்த. தானவர்-தனு வழி வந்த அசுரர்கள். முற்றுதல்-முடித்தல். |
(19) |
6090. | 'விலங்கினர் உயிர் கெட விலக்கி, மீள்கலாது, |
| இலங்கையின் இனிது இருந்து, இன்பம் |
| துய்த்துமேல்,- |
| குலம் கெழு காவல!- குரங்கின் தங்குமோ? |
| உலங்கும் நம்மேல் வரின், ஒழிக்கற்பாலதோ? |