குலம் கெழு காவல! - நமது குலம் விளங்கத் தோன்றிய அரசே! விலங்கினர் உயிர் கெட விலக்கி - மாறுபட்ட பகைவர் பால் சென்று உயிர் அழியக் கொன்று நீக்கி; மீள் கலாது - திரும்பி வருதலைச் செய்யாமல்; இலங்கையில் இனிதிருந்து - இலங்கை மாநகரிலே இனிது வீற்றிருந்து;இன்பம் துய்த்து மேல் - இன்பத்தை நுகர்ந்திருப்போமானால்;குரங்கின் தங்குமோ-குரங்குகளின் அளவில் நிற்குமோ? உலங்கும் நம் மேல்வரின் - கொசுக்களும் நம்மேல் படை எடுத்து வருமாயின், ஒழிக்கற் பாலதோ - அதனை விலக்கி வெற்றி பெரும்பான்மை நமதோ? |
விலங்குதல் - மாறுபடுதல், விலக்கி - நீக்கி. உலங்கு - கொசு. |
(20) |
6091. | 'போயின குரங்கினைத் தொடர்ந்து போய், இவண் |
| ஏயினர் உயிர் குடித்து, எவ்வம் தீர்கிலம்; |
| வாயினும் மனத்தினும் வெறுத்து வாழ்துமேல். |
| ஓயும், நம் வலி' என, உணரக் கூறினான். |
|
போயின குரங்கினைத் தொடர்ந்து போய் - இலங்கை பாழாகச் செய்து சென்ற குரங்கைத் தொடர்ந்து சென்று; இவண் ஏயினர் உயிர் குடித்து - இங்கு அந்தக் குரங்கை ஏவிய மனிதர்களின் உயிரைப் பருகி; எவ்வம் தீர்கிலம் - நமக்கு நேர்ந்த பழியைப் போக்கோமாய்;வாயினும் மனத்தினும் - சொல்லிலும் நினைப்பிலும்; வெறுத்து வாழ்து மேல் - வெறுப்பைக் காட்டி வாழ்வோமாயின்;நம் வலி ஓயும் - நமது வலிமை குறைவாகும்; என உணரக் கூறினான் - என்று, உணருமாறு கூறினான். |
எவ்வம்-பழி வாய் சொல்லையும், மனம் நினைப்பையும் உணர்த்தும். ஓய்தல்-குறைதல். |
(21) |
மகோதரன் பேசுதல் |
6092. | மற்று அவன் பின்னுற, மகோதரப் பெயர்க் |
| கல் தடந் தோளினான், எரியும் கண்ணினால் |
| முற்றுற நோக்கினான், 'முடிவும் அன்னதால்; |
| கொற்றவ! கேள்' என, இனைய கூறினான்: |
|
மற்று அவன் பின் உற- படைத்தலைவன் இவ்வாறு கூறியபின்பு; மகோதரப் பெயர் - மகோதரன் என்னும் பெயர் உடையவனும்; கல் தடம் தோளினன் - மலை போன்ற பெரிய |