தோள்களை உடையவனும்; எரியும் கண்ணினால் - கோலத்தீ மூண்டெழும் கண்களை உடையவனும் ஆகிய அமைச்சன் எழுந்து; முற்றுற நோக்கினான் - நடந்த செயல் முழுதையும் ஆய்ந்து; கொற்றவ -அரசே;முடிவும் அன்னதால் - படைத் தலைவன் கூறியதே முடிந்த முடிபு எனினும்; கேள் - நான் உரைப்பதையும் கேட்பாயாக; என இனைய கூறினான் - என்று பின்வருமாறு கூறலானான். |
மற்று - வினை மாற்றுப் பொருளில் வந்த அசை. 'அவன்' என்று படைத்தலைவனை கல்-மலை, முற்றுற-முற்றும் உற. |
(22) |
6093. | 'தேவரும் அடங்கினர்; இயக்கர் சிந்தினர்; |
| தா வரும் தானவர் தருக்குத் தாழ்ந்தனர்; |
| யாவரும், "இறைவர்" என்று இறைஞ்சும் மேன்மையர் |
| மூவரும் ஒதுங்கினர்-உனக்கு, மொய்ம்பினோய்! |
|
மொய்ம்பினோய் உனக்கு - வலிமை மிக்கவனே! உனக்கு; தேவரும் அடங்கினர் - தேவர்களும் அஞ்சி அடங்கி விட்டனர்; இயக்கர் சிந்தினர் - இயக்கர்கள் வலிமை இழந்து விட்டார்கள்; தாவரும் தானவர் - கேடில்லாத அசுரர்களும்; தருக்குத் தாழ்ந்தனர் - ஆணவம் அடங்கினர்; யாவரும் இறைவர் என்று இறைஞ்சும் - எல்லோரும் 'கடவுளர்' என்று வணங்கும்; மேன்மையர் மூவரும் - பெருமை மிக்க அரி, அரன், அயன் என்னும் மும்மூர்த்திகளும்; உனக்கு ஒதுங்கினர் - உன்னை எதிர்த்து நிற்க இயலாது விலகிப் போனார்கள். |
தேவரும், இயக்கரும், தானவரும் இராவணனது திக்கு விஜயத்தின் போது தோற்று அடங்கி விட்ட செய்தி உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. தருக்கு, மொய்ம்பு-வலிமை. |
(23) |
6094. | 'ஏற்றம் என் பிறிது, இனி-எவர்க்கும் இன் உயிர் |
| மாற்றுறும் முறைமை சால் வலியின் மாண்பு அமை |
| கூற்றுவன், "தன் உயிர் கொள்ளும் கூற்று" எனத் |
| தோற்று, நின் ஏவல் தன் தலையில் சூடுமால்? |
|
எவர்க்கும் இன்னுயிர் மாற்றுறும் - எத்தகைய வலியவர்களின் இனிய உயிரையும் மாற்றி அழிக்கும்; முறைமை சால் வலியின் மாண்பமை கூற்றுவன் - இயல்பு வாய்ந்த வலிமையின் பெருமையமைந்த எமனும்;தன்னுயிர் கொள்ளும் - தனது |