பக்கம் எண் :

24யுத்த காண்டம் 

உயிரைக்  கவரும்; கூற்று எனத் தோற்று - எமன் என்று  தோல்வியுற்று;
நின்  ஏவல்  தன்  தலையில்  சூடும் 
-  உனது  கட்டளையைத் தன்
தலைமேல் தாங்கிச் செய்வான்;  என்றால்  இனி  பிறிது ஏற்றம் என் -
இனி இதை விடவும் வேறு பெருமை என்ன இருக்கிறது?
 

(24)
 

6095.

'வெள்ளிஅம் கிரியினை விடையின் பாகனோடு
அள்ளி, விண் தொட எடுத்து, ஆர்த்த ஆற்றலாய்!
சுள்ளியில் இருந்து உறை குரங்கின் தோள் வலிக்கு
எள்ளுதி போலும், நின் புயத்தை, எம்மொடும்?
 

வெள்ளி  அம்கிரியினை -  பனியால்  வெண்மை   நிறத்தை
உடைய அழகிய   கைலாய   மலையை;   விடையின் பாகனோடு
அள்ளி
- அம்மலையில்  வாழும்  காளை   வாகனத்தை   உடைய
சிவபெருமானுடன் அள்ளி;விண் தொட   எடுத்து -   விண்ணைத்
தொடும்படி  தூக்கி  நிறுத்தி;ஆர்த்த  ஆற்றலாய் -  ஆர்ப்பரித்த
ஆற்றல்    மிக்கவனே;   சுள்ளியில் இருந்து  உறை - மரத்தின்
சுள்ளிகளிலே   வசிக்கும்;  குரங்கின்  தோள்  வலிக்கு  -  ஒரு
குரங்கின் தோளாற்றலுக்கு;  நின்புயத்தை  எம்மொடும்  -  உனது
தோள் வலிமையை  எங்களது    ஆற்றலுடன்  சேர்த்து;  எள்ளுதி
போலும்
- இகழ்ந்து பேசுவாய் போலும்.
 

வெள்ளியங்கிரி  - கைலாயமலை. அள்ளுதல் - கையில் எடுத்தல்.
இருந்து   உறை - தங்கி வாழும். 'எள்ளுதி போலும்' என்ற இடத்தில்
'போல்'  என்பது உரையசை. ஒப்பில் போலி என்பர்.
 

(25)
 

6096.

'மண்ணினும், வானினும், மற்றும் முற்றும் நின
கண்ணினும் நீங்கினர் யாவர், கண்டவர்?
நண்ண அரும் வலத்தினர் யாவர், நாயக!
எண்ணிலர் இறந்தவர் எண்ணில் ஆவரோ?
 

நாயக  -   எமது  தலைவனே!  மண்ணினும்   வானினும் -
மண்ணுலகிலும்,  விண்ணுலகிலும்;  மற்றும்  முற்றும்   -  மற்றும்
வேறுலகங்கள் முழுவதிலும்;நின் கண்ணினும்  நீங்கினார்  யாவர்
கண்டவர்
- உனது கண்ணுக்குப் புலப்படாதிருப்பவரைக் கண்டவர்கள்
யார்? நண்ணரும் வலத்தினர் யாவர்?- அவ்வாறு கண்டவருள்ளும்
உன்னால் நெருங்கமுடியாத வலிமை உடையவர் யாருண்டு;எண்ணிலர்
- உன்னை மதித்து எண்ணிப்