பக்கம் எண் :


243


ஆதீபிதேசப் படலம்

கலி விருத்தம்

பராரை மாநிழற் பண்ணவன் மேவிவாழ்
பராச ரேசம் பகர்ந்தனம் மாதவன்
பராய பைம்பொழில் ஆதீபி தேச்சரம்
பராக மாவினைப் பற்றற ஓதுவாம்.               1

     பருத்த அடியினையுடைய ஒற்றைமா நிழலில் எழுந்தருளியுள்ள
திருவேகம்பப் பெருமான் விரும்பி யுறைகின்ற பராசரேசம் என்னும்
தலத்தினைப் பற்றிப் பேசினோம். திருமகள் நாயகன் வணங்கிய பசிய
சோலையில் உள்ள விளக்கொளிப் பெருமான் வரலாற்றை வினையாகிய
தொடக்குப் பொடிபட ஓதுதலைச் செய்வாம்.

அன்ன ஊர்தி மகத்தை அழிப்பல்என்
றுன்னி வாணி நதிஉருக் கொண்டநாள்
கன்னி பால்வளர் கண்ணுதல் ஏவலின்
முன்னர் ஏகி முகுந்தன் தடுத்தனன்.             2

     ‘அன்னத்தை வாகனமாக உடைய பிரமன் வேள்வியை அழிப்பேன்’
என்று மதித்துச் சரசுவதி நதி வடிவு கொண்ட நாளில் உமையம்மையை
இடங்கொள் கண்ணுதலோன் திருஆணையின் வெள்ளம் வருமுன் எதிர்
சென்று திருமால் தடுத்தல் செய்தனன்.

அங்கங் கெய்தித் தடுத்தும் அடங்கிடாப்
பொங்கு வேகப் புதுநதி நள்ளிராத்
துங்கக் காஞ்சியில் துண்ணெனத் தோன்றலுஞ்
சங்க பாணி தளர்ந்தழி வுற்றரோ.               3

     பல விடங்களிற் சென்று தடுத்தும் மடங்காது பொங்கி எழுந்த
வேகவதி என்னும் புதிய நதி நடு இரவில் உயர்ச்சி மிகு காஞ்சிநகர்க்கண்
அச்சந்தோன்றத் தோன்றலும் பாஞ்ச சன்னியத்தைக் கைக்கொண்ட திருமால்
உள்ளம் சோர்ந்து அழிவெய்தி,

பெருவி ளக்கொளி யாகிப் பிறங்கிமற்
கருணை மால்கரி காத்தவன் சூழலின்
அருகு மேற்றிசை ஆதீப தேசமென்
றொருசி வக்குறி உங்கண் இருத்தியே.            4