பக்கம் எண் :


266காஞ்சிப் புராணம்


     துவலையாகச்சிந்துகின்ற தேன் துளிகள் செறித்த மலர்களையுடைய
சோலைகள் சூழ்ந்த இத்தலங்களுள் வைத்து ஓர் தலத்தில் இறைவன்
திருவடிகளை அருச்சனைபுரிவோர் வருத்தும் கொடிய வினைக்குக்
காரணகாரியமாகிய பிறவிக்கு ஏதுவாகிய காமமுதலிய முக்குற்றங்களின்
நீங்கிப் பரசு பாணியர் திருவடிகளைத் தலைப்படுவர்.

அரிசாப பயந்தீர்த்த தானப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் - 863.

இட்ட சித்தீச்சரப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

திகழ்அரி சாபம் தீர்த்த திருநகர் முதல்வா னாடர்
புகழ்அயி ராவ தீசப் பொன்மதில் வரைப் பீறாக
நிகழ்தரு தளிகள் சொற்றாம் நிறைஅயி ராவ தேசத்
திகழ்தருந் தென்சார் இட்ட சித்தீசத் துண்மை சொல்வாம்.   1

     விளங்கும் அரிசாப பயந்தீர்த்த தானம் முதல் விண்ணவர் புகழும்
அழகிய மதில் சூழ்ந்த ஐராவதேசப் பெருமான் தலமுடிவாகத் திருவருள்
நிகழ்தற்கு இடனாகிய திருக்கோயில்களைப் பற்றிக் கூறினோம். அருள்
நிறைவுடைய ஐராவதேசத்திற்குத் தென்மேற்கில் திகழ்தரும் இட்ட
சித்தீசத்தின் இயல்பினைக் கூறுவோம்.

தொழுதகு பெருமை சான்ற சுக்கிரன் அங்கண் எய்திக்
கெழுதகு பூசை ஆற்றிக் கிடைத்தனன் சித்தி எல்லாம்
முழுதருள் பெற்ற அன்னோன் மொழிவழித் ததீசி எய்தி
வழிபடு முறையின் ஏத்தி வச்சிர யாக்கை பெற்றான்.      2

     பலருந் தொழத்தக்க பெருமை அமைந்த சுக்கிரன் இணங்குதற்குத்
தக்க பூசனையை அவ்விடத்திற் செய்து சித்திகள் யாவும் கைவரப் பெற்றனன்.
திருவருளைப் பெற்ற அச்சுக்கிரன் உபதேசப்படி ததீசி முனிவர் ஆங்கு
விதிவழிப் பூசனையைப் புரிந்து வச்சிரயாக்கையைப் பெற்றனர்.

அருள் பெற்ற சுக்கிரன் ததீசியை ஆற்றுப் படுத்தினர்.

உதீசிமா நாகங் கோட்டி முப்புரம் ஒறுத்த அயிரா
வதீசனுக் கணிய தென்பால் வைகிய உணர்வுக் கெட்டா
அதீதனை வழுத்தி அந்நாள் வச்சிர யாக்கைபெற்ற
ததீசியின் செயல்வி ரித்துச் சாற்றுவன் முனிவீர் கேண்மின்.   3