பக்கம் எண் :


561


திருவேகம்பப் படலம்

கலிநிலைத் துறை

கல்வித்தமி ழோர்புகழ் கச்சி மயானம் ஈதால்
தொல்லைத்தவத் தீர்இனித் தோமறு சீர்த்தி சான்ற
மல்லல்தலங் கட்கர சாமணித் தெய்வக் கோயில்
செல்வத்திரு வேகம்பஞ் சிந்தையுட் கொண்டு சொல்வாம்.  1

     தமிழ்க் கல்வியை உடையோர் புகழும் திருக்கச்சி மயானத்தின்
வரலாறு இது வாகும். பல் பிறப்புக்களில் நிரம்பிய தவத்தையுடைய
முனிவர்களே! வளமடைந்த பிற தலங்களுக் கெல்லாம் அரசுவீற்றிருக்கும்
குற்ற மற்ற மிகுபுகழ் அமைந்த அழகிய தெய்வக் கோயிலாகிய செல்வத்
திருவேகம்பத்தை மனத்துட் கொண்டு அதன் பெருமையைப் புகழ்வோம்.

     படிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே
அமையாதென்ப துணர்த்துதற்கு முற்செய் தவமென விசேடித்தார்’ (சிவஞா.
சூ.8 அதி. 1. உரை.) என்னும் உரையைத் ‘தொல்லைத் தவத்தீர்’ என்புழி
எண்ணுக. தியானித்தற் குரிய பொருளாகலின் ‘சிந்தையுட் கொண்’டென்றனர்.

உலகத் தோற்றம்

மயானச்சுட ரின்வடி வான்மணி வண்ணன் தேறாத்
தியானப்பொருள் ஆக்கைக ளோடும் விராய சிந்தைத்
தயாஅற்ற பண்டன் றனைஅட்டபின் ஆவி யெல்லாம்
உயாஅற்றுட லோடிசை யத்திரு உள்ளஞ் செய்து.     2

     நீலமணியை ஒக்கும் நிறமுடைய திருமாலானும் தெளியப் பெறாத
தியானித்தற்குரிய பொருளாகிய திருவேகம்பப் பெருமானார் எல்லா
உடம்புகளோடும் கலந்திருந்தவனும் உள்ளத்துள் இரக்கம் இல்லாதவனும்
ஆகிய பண்டாசுரனை மயானத்துட் சுடரும் சுடர் வடிவினாலே அழித்த
பின்னர் உயிர்கள் அனைத்தையும் வருத்தம் நீக்கிப் பண்டு போல
உடம்புகளோடும் கூடத் திருவுள்ளத்துட் கொண்டு,

பகுப்பின்றி மன்னும் பழமாமறை தன்னை நோக்கி
வகுக்கும்படைப் பின்பொருட் டுத்தனி மாவ தாகிச்
செகுக்குந்திறல் வல்ல மயானத்தின் மேற்றி சைக்கண்
தொகுக்குந்தளிர் பூகனி துன்ற வயங்கு கென்றான்.    3

     வன்னம், எழுத்தென் றுருக் கொள்ளாது விரியாது அழிவின்றி நிற்கும்
பழைய பெருமையுடைய வேதத்தை நோக்கி, கூடிநிற்கும் நிலையினின்றும்
வகுத்தலாகிய சிருட்டியின் பொருட்டு ஒற்றைமாமர 71