பக்கம் எண் :


24புலவர் குழந்தை

   
ஆராய்ச்சி அணிந்துரை
                                              தமிழக முதல்வர்
                            டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள்
 
     காலத்தி்ற்கும் கருத்துக்கும் ஒவ்வாதனவற்றை - முடைநாற்றம் வீசுகின்ற மூடப்
பழக்கவழக்கங்களை - பழமையை அழித்துப் புதுமையைப் படைக்கும் புத்துலகச் சிற்பி
கவிஞனேயாவான். உண்மையான கவிஞன் பண்பாட்டின் சின்னமாகப் - பண்பாட்டின்
கருவூலமாக - விளங்குவான். தமிழகத்தைப் பொறுத்தவரை, கவிஞர்களுக்கு நீண்ட
நெடுநாள் பாரம்பரியமுண்டு; மரபுண்டு. தமிழ் மொழி காலத்தாலும் கருத்தாலும்
மூத்தமொழி. அது, ‘முன்னைப் பழமைக்கும் பழமையதாய்ப் பின்னைப் புதுமைக்கும்
பேர்த்துமப் பெற்றியதாய்த்’ திகழும் பொற்புடைய மொழி; காலத்தால் முதுமை யெய்தாக்
கட்டழகு வாய்ந்த மொழி.

     தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டு ஒரு
மறுமலர்ச்சி இயக்கம் தோன்றிய நூற்றாண்டு எனலாம். இந்நூற்றாண்டின் மறுமலர்ச்சி
இயக்கத்திற்கு - மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு - வித்தூன்றியவர் ‘செந்தமிழ்த்
தேர்ப்பாகன்’ பாரதி. பாரதிக்குப்பின், செந்தமிழ் இலக்கிய உலகில்,