பக்கம் எண் :


34புலவர் குழந்தை

   
               இராவண காவியச் சிறப்பு
 
அறிஞர் அண்ணா அவர்கள்
 
     ழுஇராவண காவியம் - பழமைக்குப் பயணச் சீட்டு; புதுமைக்கு நுழைவுச் சீட்டு;
தன்மான இயக்கத்தார் தமிழ்ப் பகைவர்கள்; காவியச்சுவை யறியாதார்,
கலையுணர்வில்லாதார் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றலாயுதம்; தமிழ்
மறுமலர்ச்சியின் தலைசிறந்த நறுமலர்; நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும்,
இனப்பற்றும் ஒருங்கமைந்த ஓவியம்! தமிழரின் புத்துணர்வுக்கான போர் முரசு! காவிய
உருவில் ஆரியத்தைப் புகுத்திவிட்டோம்; எனவே, இது அழிந்து படாது என்று
இறுமாந்திருப்போர்க்கு ஓர் அறைகூவல்; தமிழர்க்கு உண்மையை உணருமாறு கூறும் ஓர்
அன்பழைப்பு; தமிழரசுக்குக் கால்கோள்; விடுதலைக் கீதம்.ழு
 
டாக்டர் கலைஞர் அவர்கள்
 
     ழுஎழுத்துமுத லைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலரான புலவர் குழந்தை
அவர்கள், இராவணன் ஏற்றங் கூறும் இராவண காவியத்தை இயற்றித் தந்து, இருபதாம்
நூற்றாண்டில் மாகாவியங்கள் வெளிவரவில்லை என்ற குறையை நிறைவு செய்தார்கள்.

     இராவணனை இரக்கமென்றொரு பொருளிலா அரக்கர்தம் தலைவனாகக் கவியரசன்
கற்பித்த மாசினைப் போக்கிப் புலவர் குழந்தை அவர்கள், ‘மாசறு பொன்னாக, வலம்புரி
முத்தாக, மாசிலாத் தமிழ் மாக்கதையாக’ இராவண காவியத்தை இயற்றித் தந்தார்.

     தமிழில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களையும், இராமாயணம், பாரதம், காஞ்சிப்
புராணம், தணிகைப் புராணம் ஆகியவற்றின் இலக்கிய நயங்களையும் விஞ்சிய
கலைநயமும், காவிய அழகும், உணர்ச்சிப் பெருக்கும், ஓசையின்பமும் கனிந்து மிளிரும்
ஒரு பெருங்கருவூலமாகத் திகழ்கிறது இராவண காவியம். இந் நூல், சொல்லோசைப்
பாடல்களின் சுரங்கமாக விளங்குகிறது.