பக்கம் எண் :


இராவண காவியம் 365

   
2. கரன் கொலைப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
          1. கள்வ ளத்தகு ழலியைக் காம முற்றவி ராமனும்
            உள்வெ யர்த்தவன் றம்பியா லுருக்கு லைத்தமை கண்டனம்
            வள்வ ளத்தவில் லாரியர் வாள்வ ளத்தவேல் மறவலி
            கொள்வ ளத்தகைக் கரனையுங் கொலைபு ரிந்தமை காணுவாம்.

          2. பொன்னை வன்கொலை செய்துமே போன வாரிய ராமனும்
            தன்னி னத்தவர் சாகவே தாமு ஞற்றுதல் தகவல
            என்னு நேர்மை யிலாத்தமி ழிரண்ட கப்படை மூளவே
            என்ன வென்ன மனைவியு மியன்ற வாறுரை செய்தனன்.

          3. முன்ன மோசொல வில்லையா மூண்ட தேபகையென் செய்கேம்
            பின்னை யுமெனை நேரொரு பெண்கொ லைபுரிந் தீர்களே
            அன்ன வள்தமி ழகமதை யாளிறை தங்கை யாமெனில்
            என்ன கேடுவந் தெய்துமோ வேது செய்குவ னேழையே.

          4. மனைவி சொல்லினைத் தட்டியே வாழ்ந்த தாருல கத்திலே
            வினையை வேண்டுமென் றேகொலை விலைக்கு வாங்கிக் கொண்டீர்களே
            அனையை யொத்த தமிழர்க ளரசி யப்படி யென்செய்தாள்
            சினைசி தைத்தலி னுங்கொலை சீரி தேயெனச் சீதையும்.

          5. அன்ன மென்னடை யழகிநீ யறிவி லாதபெண் பேதையே
            முன்னர் வெந்நிட வெந்தையை முறிய டித்தனன் முத்தமிழ்
            மன்னர் மன்னவ னாகையால் மதிலி லங்கை யிராவணன்
            தன்னை வெல்லவே தமிழகந் தான டைந்தன னறிகுவாய்.

          6. அவனை யீங்கடை கிற்கவே யரிவை யைச்சினை கொய்தனன்
            இவணி ருந்திடுங் கரனுயிர்க் கிறுதி காணுவ னின்றையே
            தவணை யின்றினித் தையலே தடுப்ப தாற்பய னொன்றிலை
            கவணெ றிற்தகல் வீழுமுன் காணு வாய்மலர் வாகையே.

          7. என்று கூறி யிடம்பெயர்ந் தேகி யேபடை கண்டனன்
            வென்றி வேற்கர னுந்தமிழ் வெறிபி டித்த மறவரை
            ஒன்று கண்டு செலுத்தினா னுருமெ னத்தமிழ் மறவரும்
            பொன்றி னாரினி யென்றுபோய்ப் பொருத னரிரு படைஞரும்.
-------------------------------------------------------------------------------------------
          4. கொலைவினை - கொலைத் தொழில். 7. உருமு - இடி.