பக்கம் எண் :


இராவண காவியம் 479

   
         76.    பருதி முன்பனிப் படலமா மாரியப் பகைமை
               அரிது மின்றதி லையமு மின்றிரண் டகராற்
               பொருதும் போதினி லிடையிடை வஞ்சனை புரியும்
               ஒருமை யாப்பலான் வேறொரு குறையிலை யுண்மை.

         77.    என்று கொண்டுசெந் தமிழிரா வணனுமாங் கிருப்ப
               ஒன்ற ருந்திறல் மறவரெல் லாந்திரண் டொருங்கே
               மன்று தோன்றுநல் லணியுறத் தொக்கனர் வடவர்
               சென்று மாமதில் முற்றிய வாற்றினைத் தெரிவாம்.
 
6. ஊர்முற்று படலம்
 
வஞ்சி விருத்தம்
 
         1.     வடவாரிய வஞ்சக நஞ்சகரூர்
               இடையார வளைந்திட வேபொழுது
               விடியாமு னெழுந்து விரைந்துடனே
               அடைவாமென வாவன செய்தனரே.

         2.    படையாளர்கள் பற்பல வாகியபோர்ப்
               படையாவையும் பண்புட னாய்ந்துசிலைத்
               தொடையோடுயர் தோணிகள் தூணியுற
               வடிவேலொடு வாள்முனை கையுளர்வார்.

         3.     கிணைகோடு கிளைமுர சம்பணிலம்
               பணைகோலின பண்கொளு வாரணிவ
               அணிவாரணிந் தாவன யாவையுமே
               புணையாகவே போர்வலர் கைபெறுவர்.

         4.    பரிபண்ணுவர் பண்ணுவர் பாயுருள்சீர்
               அரிபண்ணுவர் பண்ணுவர் ஆய்படையுள்
               கரிபண்ணுவர் பண்ணுவர் கால்வல்கடாச்
               சரிபண்ணுவர் சால்புற யாவையுமே.
-------------------------------------------------------------------------------------------
         76. மையாத்தல் - மயங்குதல். 2. தொடை - நாண் தொடுப்பு. தோணி - அம்பு. தூணி - அம்புக்கூடு. உளர்தல் - தீட்டுதல். 3. கிணை - ஒருவகைப் பறை. கோடு - கொம்பு. கிளை - ஓரிசைக்கருவி. பணிலம் - சங்கு. பணை - மூங்கில் போன்ற தடி. கோல் - தடி. இன - இவை போன்ற பிறவும். 4. அரி - தேர். ஆய்படை உள்பண்ணுவர் வேண்டிய படைக் கலங்களைத் தேருள் வைப்பர். சால்பு - தகுதி.