பக்கம் எண் :


இராவண காவியம் 487

   
         55.   கோயில் போலுங் கொடுமுடி வானுயர்
              வாயில் நாலு மருவு மதிற்புற
              வேயில் போலு மிளைப்புறம் போந்துபுற்
              றீயல் போலு மீடையற மொய்த்தனர்.
 
7. முதற்போர்ப் படலம்
 
        1.    முருகு வாழ்நகர் முற்றுகை கண்டனம்
              மருத மார்ப்ப மணந்தவ ரின்னுயிர்
              தருது மென்றழத் தண்ணம் படுகளம்
              பொருது வீழ்முதற் போரினைக் காணுவாம்.
 
மிளையிடைப் போர்
 
         2.   முண்டி வந்து முழைகொள் களிற்றினங்
              கண்டு டன்றெழு கண்டீ ரவமெனக்
              கண்ட துந்தறு கண்மற வர்சினங்
              கொண்டெ ழுந்தருங் கொண்டலி னார்த்தனர்.

         3.   காத்து நின்ற கடுஞ்சின வீரர்கள்
              வேர்த்தெ ழுந்தொளி வேலினும் வாளினும்
              போர்த்து மற்றவர் பூத வுடலினை
              ஆர்த்து நின்றன ராரிய ரச்சுற.

         4.    நன்றி யின்றயல் நாட்டிடை வந்ததும்
              மன்ற லங்குழல் வன்கொலை செய்ததும்
              ஒன்ற வி்ன்றெம தூரினை முற்றலும்
              கொன்று ணுந்தொழி லீருங்கள் கொள்கையோ.

         5.    காட தாமுயிர் கட்குப் பிணஞ்சுடு
              காட தாங்கொலை காரரே யின்றொடு
              வீட தாமவை கட்கு விருந்தெனக்
              கூடி யுண்டுள் குளிர்ந்திடச் செய்குவோம்.

         6.    வலிய வெற்று மடங்க லிருந்துவாழ்
              மலையை முற்ற மருவி யளவிலா
              எலிக ளுற்ற வெனவரு வீணர்காள்
              தொலைக முற்றுந் தொடர்பினி யின்றியே.
-------------------------------------------------------------------------------------------
         55. வேய் இல் - மூங்கில் புதர். 1. முருகு - அழகு. மருதம் - மணப்பறை. தண்ணம் - சாப்பறை. 2. முழை - குகை. கண்டீரவம் - சிங்கம். கொண்டல் - முகில். 3. வேர்த்து - சினந்து. பூதவுடல் - பருவுடல். 5. வீடு - விடுதலை