பக்கம் எண் :


536புலவர் குழந்தை

   
        63. அரியை வஞ்சனை யாய்க்கொன் றுதனுழை
            நரிபு குந்தது போல நறுந்தமிழ்ப்
            பெரிய வன்றனைப் பின்னவ னாற்கொலை
            புரிபு கோயிலுட் புக்கனன் பாவியே.
 
14. பெருமைப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
        1. புக்கனன் கொடிய பாவி பொருவறு தமிழர் வாழ்வு
          மக்கிடப் புகலாய் வந்த வடவர்நன் மதிப்பின் மிக்க
          மக்களா யினிது வாழ மாதமிழ்த் தலைவர் செல்வந்
          தொக்கிட வினிது வாழ்ந்த சுடர்மணி மாடக் கோயில்.

        2. தேனினு மினிய தீஞ்சொற் செந்தமி ழன்னை யேங்க
          வானெனப் புகலாய் வந்த வடமொழி யாட்டி யோங்க
          ஏனவ ருடைமை வெஃகு மிழிதகைத் தமிழர் தம்மால்
          தானெனத் தருக்கிப் புக்கான் தமிழர்பே ரிறைவன் கோயில்.

        3. பழந்தமிழ்ப் புலவர் கூடிப் பைந்தமி ழாய்ந்த பாங்கர்
          மழிந்தநெல் லிடத்துப் புல்போல் வடமொழிப் புலவர் கூடக்
          கொழுந்தரிந் தினங்கொல் பொல்லாக் கோடரிக் காம்பர் தம்மால்
          விழைந்துசென் றினிது புக்கான் விசும்புய ரண்ணல் கோயில்.

        4. சோறிடு துணைக்கை கொல்லுஞ் சுடுதொழி லாளர் தம்மால்
          தோறொளை நரம்பின் றேறற் சுவையினிற் றோய்ந்தே யின்பச்
          சேறளைஇ யவையே ழெட்டுஞ் செறிதமி ழாடல் பாடல்
          மாறிட வினிது புக்கான் வானுயர் புகழோன் கோயில்.

        5. புனமுள தனையு முள்ள புதரெனப் புலங்கொள் தூய
          மனமுள தனையு முள்ள மாசெனத் தமிழர் தங்கள்
          இனமுள தனையு முள்ள இரண்டகர் தம்மால் ராமன்
          தனமுள தனையு முள்ள தலைமகன் கோயில் புக்கான்.
----------------------------------------------------------------------------------------
        63. நுழை - குகை. 1. மக்கிட - நலிய. 2. வானென ஓங்க. 3. மழிந்த - மழித்த - அறுத்த. 4. தோறொளை - தோல்தொளை. தேறல் - தேன், சாரம். சேறு - இனிமை. ஏழ் - ஏழிசை. எட்டு - எட்டுமெய்ப்பாடு. பாடல் ஆடல் எனக் கொள்க. 5. தனையும் - அளவும். புதல் - முட்புதல். தனம் - தன்அம். அம் - நீர்மை, இங்கே மானம், உளதனையும் தன்அம் உள்ள எனக் கூட்டுக. தன்அம் - தன்மானம்.