பக்கம் எண் :


566புலவர் குழந்தை

   
         29.  என்றின வாறு கூறியே யேச வியல்கெட்டு
             முன்றி லிருண்டு வாயுறை கதவ முகமூடிச்
             சென்றவர் காணக் கைவிழி காட்டுந் தெருவிட்டுத்
             தன்றம ரோடு கோயில் புகுந்தான் தகவில்லான்.

         30.  சீரிய முறையில் லானுயர் தமிழர் திரளான
             நேரிய வினம்விட் டேயர சவையில் நிலனாளும்
             ஓரிய னாய்நின் றொன்னலர் துணையை யுறவோம்பி
             ஆரிய வடிமை யாயர சிருந்தா னவனம்மா.
 
18. இறுவாய்ப் படலம்
 
கலி விருத்தம்
 
         1.  விதைப்பினைத் தின்றுமே வெறுநி லத்தினை
            முதைப்புனங் காட்டிய மூரிக் கீந்துமே
            இதைப்பெறு கெனச்செலு மிலங்கை கண்டனம்
            அதைப்பறி மைபுகு மயோத்தி காணுவாம்.

         2.  இரண்டக மறிகிலா விறைவன் மண்மிசைப்
            புரண்டிடத் தமிழகம் புலம்ப நின்றிடும்
            இரண்டகன் றனைப்பிரிந் திலங்கை நீங்கியே
            திரண்டதம் மவரொடு சிலைக்கை ராமனும்.

         3.  பரிசிலா ரொடுசில பகல்ந டந்துபோய்க்
            கரிசுசுக் கிரீவனுங் கனிந்து நல்கிய
            வரிசையோ டவன்விடை வழங்கக் கொண்டுநல்
            லரசினை யவாவியே யாறு சென்றனன்.

         4.  முனிவரும் படைஞரு முடுகிச் சூழ்வர
            மனையொடு செலச்சில மாதஞ் சென்றதர்
            கனிவளர் கானகங் கடந்து நாடுகண்
            டனையவன் மகிழ்வுட னயோத்தி புக்கனன்.
----------------------------------------------------------------------------------------
         1. விதைப்பு - பயிர். முதைப் புனம் - முதிர்ந்த பயிர் நிலம். மூரி - கிழட்டெருது. பறித்தல் - தின்றழித்தல். மை - எருமை, இங்கே எருமைக் கூட்டம். 3. பரிசு - தன்மை. கரிசு - குற்றம். ஆறு - வழி. 4. அதர் - வழி.