முயலாமல் திரும்பிப் போவது உனக்கு நல்லது” என்றான். “போர் செய்யவேண்டுமென்று விரும்பினால் வியாகரணம் முதலான அறிவுத் துறைகளில் சிறந்தோரைக் கண்டு அவருடன் வாதுப்போர் செய்யலாம். அஸ்திரம் தொட்டுப் போர் செய்யும் தொழிலுக்கு நீ தகுதியற்றவன். எனக்கு இணை இல்லாதவன்” என்று கூறுகிறான். இதனைக் கேட்டு கடுங்கோபம் கொண்ட பரசுராமன் “கடலை எதிர்த்து ஒரு குளம் போரிட எழுந்தது போல நிற்கும் உன்னுடன் நான் போரிட்டால் உன்நிலை என்னாகும் என்று காண்போம்.” என்று கூறித் தன் கோடரியை இராமன் மீது வீசி எறிந்தான். தீக் கொழுந்துகளை உமிழ்ந்து வந்த அந்தக் கோடாரியைக் கண்டு தேவர் முதலானோர் அஞ்சி நடுங்கினர். இத்துடன் நம் வம்சம் தொலைந்தது என்று தசரதன் வருந்திப் புலம்பினான். இராமன் தசரதனை ‘அஞ்சற்க’ என்று கையமர்த்தி அக்கோடாரியை தன்னுடைய பயங்கரமான விஷ்ணு தனுசை நாணேற்றி அம்பெய்யத் தயாரானான். தசரதனுட்பட்ட எல்லோரும் அஞ்சி நடுங்கியவர்களாக இருந்தனர். இராமன் உள்ளத்துள்ளே சிரித்துக் கொண்டவனாய் தேரை விட்டு இறங்கிப் பரசுராமன் மேல் பாய்ந்து அவ்வில்லை அபகரித்துக் கொண்டான். பிராமணர்களைத் துன்பப்படுத்துவது எங்களுக்கு அழகன்று. நீ எம்மால் வணங்கத்தகவன். இனி, போர் போன்ற காரியங்களில் ஈடுபடாமல் உங்களுக்கு ஏற்ற தவம் முதலியவற்றைச் செய்து கொண்டு அமைதியாக வாழ்வது நல்லது; தயவு செய்து இங்கிருந்து சென்றுவிடு” என்று இனிய முகத்தோடு கனிவான சொற்களைப் பேசுகிறான் இராமன். என்னுடைய வில்லொலி கேட்டே அரசியரின் கர்ப்பம் கலங்கிவிடும்; என்னுடன் போரிட்டு வென்ற அரசர் உணர்ந்து மகிழ்ந்த பரசுராமன், தன் அவதாரம் முடிந்து இராமாவதாரம் தொடங்கியது, என்று தீர்மானித்து இராமனைக் கனிவுடன் தழுவிக்கொண்டான்; அம்பறாத் தூணியிலிருந்த எல்லா அம்புகளையும் மகிழ்வுடன் இராமனுக்குக் கொடுத்துவிட்டுத் தன் ஆசிரமம் நோக்கிச் சென்றான். (1. 17:3-19). துளசிராமாயணத்தில் பரசுராமர் எதிர்ப்பு சுயம்வர மண்டபத்திலேயே நிகழ்கிறது. இராமன் வில்லை முறித்த உடனே அங்கே குழுமியிருந்த அரசர்களெல்லாம் ஒன்றுகூடி இராம லக்குவர்களை எதிர்த்துப் போரிட்டுச் சீதையைக் கவர்ந்து செல்ல முயலுகின்றனர். அப்போது பெருங் கோபங்கொண்டவனாய் இடிபோன்ற முழக்கம் செய்துகொண்டு, பரசுராமன் அங்கே தோன்றுகிறான். அவனைக் கண்டதும் அரசர்களெல்லாம் பயந்து |