யெல்லாம் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த அரசர்கள் எல்லாம் சத்தமில்லாமல் ஒவ்வொருவராக நழுவி ஓடிவிட்டனர். (268-284) தொகுப்புரை: இராமன் - பரசுராமன் சந்திப்பு வான்மீகம் முதலான பல இராமாயணங்களில் தசரதனுள்ளிட்டோர் அயோத்திக்குத் திரும்பும்போது நிகழ்ந்தது. துளசிதாசர் மட்டும் சுயம்வர மண்டபத்திலேயே திருமணத்திற்கு முன்னர் இச் சந்திப்பு நிகழ்வதாகக் காட்டுகிறார். எனவே, துளசி ராமாயணத்தில் பரசுராமன் வரும்போது தசரதன் இல்லை; அதற்குப் பதில் விசுவாமித்திர முனிவன் இருக்கிறான். வான்மீகம் முதலானவற்றுள் பரசுராமன் சந்திப்பின் போது இலக்குவன் பேசுவதாகக் குறிப்பு இல்லை. ஆனால், துளசியில் இலக்குவன்தான் பரசுராமனுடன் மிகுதியாகப் பேசி அவனை எள்ளி நகையாடுவதாகக் காட்டப்படுகிறான். பிற எல்லா இராமாயணங்களை விடவும் துளசியில்தான் இந்த நிகழ்ச்சி மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. வான்மீகம் அத்யாத்மம் போன்ற முன்னூல்களில் காணப்படாத இந்த மாற்றங்களைத் துளசிதாசர் வடமொழியில் இயற்றப்பட்ட மகாநாடகம் என்னும் இராமாயண நாடகத்தைத் தழுவிப் புகுத்தியுள்ளார் என்று இராமகாதை அறிஞர்கள் கருதுகின்றனர்.55 பரசுராமனின் வருகை, சிவதனுசை ஒடித்ததனால் ஏற்பட்ட சீற்றம், அதனை ஒடித்த இராமனைத் தன் விஷ்ணுதனுசை வளைக்கும்படி அழைக்கும் செருக்கு, இராமனின் வெற்றி, பரசுராமன் தசரத ராமனைத் திருமால் என உணர்ந்து வாழ்த்தி மீளூதல் என்னும் நிகழ்ச்சிக் கூறுகளை எல்லா இராமாயணங்களும் ஒன்றுபோல் கூறுகின்றன. கன்னட தொரவெ இராமாயணம் மட்டும் இராமனைப் போருக்கு அழைப்பதாகக் கூறுகிறது, சிவதனுசை வளைக்கும்படி பரசுராமன் கூறவில்லை. மாறாகப் பரசுராமன் தசரதராமன் மீது கோடரியை எறிந்து போர் புரிவதாகவும், தசரதராமன் அம்புதொடுத்து அதைச் சிதைத்து விடுவதாகவும் கன்னட இராமாயணம் காட்டுகிறது. மேலும், பரசுராமன் விஷ்ணுதனுசை நாணேற்றி அம்பெய்யத் தயாரானபோது தசரதராமன் அவன்மேல் பாய்ந்து அந்த வில்லை அபகரித்துக் கொண்டான் என்றும் கூறுகிறது. பிற இராமாயண நூல்களில் இச்செய்தி காணப்படவில்லை. இனிக் காஷ்மீர மொழியில் எழுந்த ப்ரகாஷ் ராமாயணம், சங்கர ராமாயணம் ஆகியனவும், பஞ்சாபியில் எழுதப் பெற்ற
55. Camille Bulcke, 63 |