118

கோவிந்த  ராமாயணமும்   இராமன்   விஷ்ணு   தனுசைத்  துண்டு
துண்டாக ஒடித்து எறிந்தான் என்று கூறுகின்றன.56 மிகப் பிற்காலத்தே
18ஆம்  நூற்றண்டுக்குப் பின்னர் எழுந்த இந்த ராமாயணங்கள் கூறும்
இச்செய்தி முந்தைய ராமாயணங்களில் காணப்பெறவில்லை.

வான்மீகம், தெலுகு ராமாயணங்கள், தொரவெ ராமாயணம் ஆகியன
பரசுராமனுடன்  வாதிடும்போதும்,  விஷ்ணுதனுசை  வாங்கி வளைத்து
நாணேற்றும்போதும்,    மிகவும்    கோபமுற்றவனாக    இராமனைக்
காட்டியுள்ளன,     கம்ப    ராமனும்,    துளசி    ராமனும்    மிக
அமைதியானவர்களாக,   புன்னகை   மாறாத  முகங்களுடையவராகப்
படைக்கப்பட்டுள்ளனர்.   இந்த  இரு  இராமன்களும்  பரசுராமனுக்கு
அறிவுரை  வழங்கி நல்லாற்றுப் படுத்துவோராகக் காட்சியளிக்கின்றனர்.
கம்ப ராமன்

                                        முறுவல் எய்தி

நன்று ஒளிர் முகத்தனாகி நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில்தருக.

என்று   கூறுகிறான்.    இடுக்கண்   வரும்போதெல்லாம்  இராமனின்
முறுவற்  பண்பையும், திருமுக மலர்ச்சியையும்  விதந்து குறிப்பிடுவதை
கம்பன்   பாத்திர   மரபாகக்    கடைப்பிடிக்கிறான்.   அரசு  துறந்து
காடேகுமாறு கைகேயி கூறியபோது இருந்த இராமனின் நிலையை,

இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்....
அலர்ந்த செந்தா மரையினை வென்றதம்மா ( II. 3:112)

என்றும், விராதன்மீது கணை தொடுக்குமிடத்து,

வீரனும் சிறிதுமென் முறுவல் வெண்ணிலவு உக (III.1:22)

என்றும், இராவணனின் வில்லை முறிக்க அம்பு தொடுத்தபோது,

முறுவல் எய்திய முகத்தினன் முளரியம் கண்ணன் ( VI:14:240)

என்றும்,      இராவணன்     இராமனின்     போர்த்திறம்    பற்றி
மாலியவானிடம்    கூறுமிடத்து    இராமன்   அரக்கர்   கூட்டத்தை
அழித்தபோதும், என்னை எதிர்த்து நின்றபோதும் அவன் முகம்,

                         அந்தக் கூனிகூன்போக உண்டை

தெறித்த போது ஒத்த தன்றிச் சினம் உண்மை தெறிந்த
தில்லை. (VI. 15:17)


56.  71-72 vksadkj dkSy