கண் பார்வை மிகவும் குறைந்துள்ள நிலையில் பாடல்கள், உரை முழுவதையும் படித்துக் காட்டி, செப்பம் செய்ய உதவியவரும், பாடல் முதற் குறிப்பு அகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, ஆகியவற்றைத் தொகுத்துத் தந்தவரும் ஆகிய நா. சந்திரசேகரன் அவர்க்கு என் நன்றி பெரிதும் உரித்தாகுக. கம்பன் இராமகாதை மிகச் சிறந்த காப்பியம் ஆதலின் அதற்கேற்ற முறையில் ஒளி அச்சுக் கோப்பு முறையிலும் சிறந்த கட்டமைப்போடும் விலைத் தயாரித்துத் தந்த காந்தளகர்த்தர்க்கு நன்றி உரியதாகும். இந்நூலைப் பலரும் வாங்கிப் பயன் அடைவதன் வாயிலாகவே கம்பன் அறநிலை மேலும் மேலும் இப்பணியில் ஈடுபட ஊக்கம் பெறும். தமிழ்ப் பெருமக்கள் மனமுவந்து இதனைச் செய்வார்கள் என்னும் துணிவுடையேன்.
|