ஏவுதற் கருத்தாவின் கருத்து வழி நின்று இயற்றுதற் கருத்தாக்களாக எத்துணையோ தச்சர்களும் கொத்தனார்களும் பெருங் கோவிலை எழுப்பினர். அவர்களைப் போல உரையாசிரியர் குழுவினர் கம்ப ராமாயண விளக்க உரையைக் கண்ணும் கருத்துமாக இருந்து உருவாக்கினர். இந்தக் குழுவினரை நெறிப்படுத்திடச் செந்தமிழ் வித்தகர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் வாய்த்தார். கம்பர் பணிக்கு இவ்வாய்ப்பு ஒரு பெறலரும்பேறு உரையாசிரியர்களை நெறிப்படுத்தியதோடு, முதன்மைப் பதிப்பாசிரியராகவும் அமைந்து இவ் விளக்க உரைப் பதிப்பைச் செம்மைப்படுத்தியுள்ள அவருக்குப் பொதுவாகத் தமிழர்களும் குறிப்பாகக் கம்பர் ஆர்வலர்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாவர். உரை எவ்வெவ்வாறு அமையவேண்டும் என்பது 16.5.1992 இல் நடந்த அமைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பெற்றது. அந்த வழிகாட்டலை மனங்கொண்டு உரையாசிரியர் ஒவ்வொருவரும் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பப்பத்துப் பாடல்களுக்கு உரை எழுதி அனுப்புமாறு கேடடுக்கொள்ளப்பெறறனர். 1992 ஜூன் மாதம் 27, 28 ஆகிய இரண்டு நாள்களில் உரையாசிரியர்கள்இரண்டாம் முறையாகக் கூடினர். அவாகள் எழுதிய உரைப் பகுதிகளைப்பேராசிரியர் அ.ச.ஞா. முதலிலேயே படித்துவந்தார்; கூட்டத்தில்ஒவ்வொருவரும் உரையையும் வரிவரியாகப் படித்துத் திறனாய்வு செய்தார்.இந்த திறனாய்வு விவாதத்தினால் விளக்கவுரையின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தெளிவாயிற்று. அதன்பின்னர் உரையாசிரியர்கள் பணியைத் தொடர்ந்து செய்தனர். முடிவு நிலையில் மீண்டும் பேரா. அ.ச.ஞா. வரிவரியாகப் படிக்கக் கேட்டு, வேண்டிய மாற்றங்கள், திருத்தங்கள் செய்தார். செந்தமிழ் வித்தகர் - திறனாய்வு வேந்தர் - கம்பன் கலை நிலை கண்டவராகிய அ.ச.ஞா.வின் நெறிகாட்டலிலும் பதிப்புப் பணியிலும் முடிவான வடிவைப் பெற்றதே இந்த கம்ப ராமாயண விளக்க உரை. |