உரையாசிரியர்களின் உரிமைக்கு ஊறு இல்லாமல் கவிச் சக்கரவர்த்தியின்கருத்துவளம் புலப்படும் வகையில் பதிப்புப் பணியை மேற்கொண்டதுஅ.ச.ஞா.வின் சிறப்பு. முன்னோடிகள் கோவை, கம்பன் அறநிலை வெளியிடும் இந்தப் பதிப்புக்கு முன்னும் பலஉரைப் பதிப்புகள் வெளிவந்துள்ளன; மூலப் பதிப்புகளும் பல உண்டு. முன்னோர் செய்த பணிகளை நன்றியுணர்வோடு போற்றும் உரையாசிரியர்கள், தங்கள் தனித்தன்மை கெடாமலும் விளக்க உரையை வகுத்திருக்கிறார்கள். பலவகைகளிலும் இவ் விளக்க உரைக்குத் தனிச் சிறப்புகள் உண்டு என்பது உறுதி.மேலோர்களின் காட்சிகளையும் கண்டு, காலமும் சூழலும் தரும் புதுக் காட்சிவிளக்கங்களையும் கொண்டது இந்தப் பதிப்பு. யாப்பிலக்கண விதிப்படி சீர்கள் பிரிக்கப்பெறாமல், ஓரளவு தமிழ்ப் பயிற்சிஉடையவர்களும் எளிதில் மூலத்தைப் படித்துணருமாறு சொற் - பொருள்தெளிவுக்கு ஏற்பச் சீர்கள் பிரிக்கப் பெற்றுள்ளன. இவ்வகையில் மர்ரேகம்பெனியார் வகுத்துக்கொண்ட விதிமுறைகள் இப்பதிப்பிலே பின்பற்றப்பெற்றுள்ளன. ஆயினும், யாப்பிலக்கண நெறியையும் பேணி, பாடல்கள் யாப்பு வகையில் இன்னின்ன பா அல்ல பாவினத்துக்கு உரியன என்ற செய்தியும் இப்பதிப்பில் தரப்பெறுகிறது. இப்பதிப்பின் அமைப்பு காண்டத்தைத் திறனாய்வு முறையில் அறிமுகப்படுத்தும் முன்னுரை வழக்கம் போல அ.ச. ஞாவால் எழுதப்பட்டு முதலில் இடம் பெறுகிறது. படலந்தோறும் சுருக்கமான முன்னுரை உண்டு. சொற்பொருள் நோக்கிய வகையில் சீர் பிரித்த செய்யுள், பதவுரை, விளக்கவுரை, இன்றியமையாத இலக்கணக் குறிப்பு, ஒப்புமைப் பகுதி ஆகியவை கொண்டது இவ் விளக்கவுரைப் பதிப்பு. இறுதியில் செய்யுள் முதற்குறிப்பு அகராதியும், அருஞ்சொல்லகராதியும் காணலாம். இடைச் செருகலாகவோ பிற வகையாலோநூலுள் இடம் பெற இயலாதவையாயினும், ஏடுகளில் இடம் பெற்றுவிட்டமிகைப் பாடல்களையும் புறக்கணிக்க விருப்பமில்லை. ஆராய்ச்சியாளர்க்கு |