14

அம்மிகைப் பாடல்களும் ஏதேனும் பயன் தரக்கூடும். ஆதலால், மிகைப்
பாடல்களும் காண்டத்திறுதியில் தரப்பெற்றுள்ளன.  பல்களைச் செல்வர்
தெ.பொ.மீ., பதிப்பு நாயகம் பேரா. மு. சண்முகம் பிள்ளை, பேரா. அ.ச.ஞா
ஆகியோர் ஏற்கனவே வரையறுத்துள்ளபடி வெளிவந்த சென்னைக் கம்பன்
கழகப் பதிப்பு இவ்வகையில் ஓரளவு உதவியது. சென்னைக் கம்பன் கழகப்
பதிப்பிலுள்ள பாடங்களை அப்படியே ஏற்காமல், உரையாசிரியர்களின்
ஆய்வுணர்வுக்குப் பொருத்தம் என்று பட்ட பாடங்களே இப் பதிப்பில் இடம்
பெறுகின்றன.

     மொத்ததில் இப்பதிப்பு ஏனைய பதிப்புகளினின்றும் வேறுபட்ட
முத்திரைபதித்த தனிப்பதிப்பு என்றால், மிகையாகாது.

ஒரு குறிப்பு

     இராமாயண ஆர்வலர்களும் தமிழர்களும் பெருமைப்படத் தக்க
இத்திருப்பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. திருப்பதி வேங்கடேசப்
பெருமாள் திருவருள் கணிசமான நிதிக் கொடையாகக் கிடைத்துள்ளமை
புத்தூக்கம் தரும் செய்தியாகும்.

     இக் காண்டத்தில் டாக்டர் மணவாளனின் ஒப்பிலக்கியக் கட்டுரை
இடம்பெறவில்லை. எல்லாக் காண்டங்களுக்கும் உரிய கட்டுரைகள் இறுதியில்
ஒருதொகுதியில் வெளியிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

     இலக்கணக் குறிப்புகள் பற்றிய விளக்கம், யாப்பிலக்கண விளக்கம்,
கதைக் குறிப்புகள் ஆகியவற்றின் தொகுப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
பயில்வோருக்கும் ஆய்வாளர்க்கும் உதவியாகக் கூடிய இவற்றைக் கடைசியில்
வெளியிட எண்ணியுள்ளோம்.

நன்றி

     இத்திருப்பணியில் நாட்டத்தை ஏற்படுத்தி வழிநடத்திவரும் அலகிலா
விளையாட்டுடைய தலைவர்க்கு முதலில் நன்றி செலுத்தவேண்டும். 'அலகிலா
விளையாட்டுடையார்' என்பதை இம் முயற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும்
உணர முடிந்தது, உண்மை; வெறுஞ் சொல் அலங்காரம் அன்று.

     செந்தமிழருட் செம்மல் டாக்டர் கோவிந்தசாமி இட்ட கடைகால், அந்த
அளவிலே நின்றுவிடாமல், மேல் தொடர்ந்து கவிச்சக்கரவர்த்தியின்