அதாவது வாலி வதைத்தை நிகழச் செய்தவன் அனுமனேயாவான். வாலி என்பவன் யார் என்று தெரியாத இராமனை இவ்வதத்தைச் செய்யுமாறு தன் அறிவின் திறத்தாலும் சூழ்ச்சியாலும் தூண்டியவன் அனுமனே ஆவான். இம் மாபெரும் திட்டத்தை தன் அறிவின் துணைக் கொண்டு தீட்டி, காலம், இடம் என்பவற்றை நுன்னிதின் தேர்ந்து அத்திட்டத்தை செயற்படுத்தியவன் அநுமனை ஆவான் என்பது இதுகாறும் கூறியவற்றால் நன்கு விளங்கும் கம்பநாடன் கருத்தும் இதுவேயாகும் என்பதே அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறு அழியாமை மறிந்து உருள போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்; (4723) என்ற பாடல் அறிவுறுத்துகின்றது. நாலா திசைகளிலும் பிராட்டியைத் தேடப் பலர் அனுப்பப்படுகின்றனர். ஆனால், பிராட்டியைக் கொண்டுசென்றவன் இராவணன் என்பதால் கவிஞரின் அறிவுமிக்க அனுமனைத் தேர்ந்தெடுத்து தென்திசைக்கு அனுப்புகின்றனர். பல்வேறு வீரச் செயல்களைச் செய்துகொண்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு மயேந்திரமலை மீது தங்குகிறான் அனுமன். கடலைக் கடப்பது யார் என்ற வினாத் தோன்றியபொழுது ''தன் பெருமை தான் பெருமையை எடுத்துக்கூறுகிறான். விண்ணில் சஞ்சரிக்கும் ஆற்றலை வாயுவின் மைந்தன் பெற்றுள்ளான் என்பது உண்மையே. ஆனால், இராவணன் முதலானோர் பெற்ற ஆற்றலைத் தவறான வழியில் சென்று பாழாக்கியது போன்று மாருதி தன் ஆற்றலை, வலிமையை வீணடிக்கவில்லை. ஓர் ஆன்மா கீழே இழுக்கப்படாமல் மேலே செல்ல வேண்டுமென்று விரும்பினால் அது கைக்கொள்ள வேண்டிய முதற்பணி - முக்கியப் பணி, புலன் அடக்கமாகும். அந்தப் புலனடக்கம் முற்றிலும் கைவரப் பெற்றவன். 'ஐந்தளித்து' அதனால் பெறும் ஆற்றலையும் பெற்றிருந்தான் அனுமன். பதினொரு பாடல்களி்ல் அனுமனின் ஆற்றலை அவனுக்கே நினைவூட்டியே சாம்பன் மிக நுண்மையான கருத்தை ஒரு பாடலில் வைத்துப் பேசுகிறான்: நீதியில் நின்றீர்; வாய்மை அமைந்தீர்; நினைவாலும் மாதர் நலம் பேணாது வளர்ந்தீர்; மறை எல்லாம் ஓதி உணர்ந்தீர்; ஊழி கடந்தீர்; உலகு ஈனும் ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர் (4725) வரம்பிகந்து, மதுவிலும் மாதர்களிடத்தும் பொழுதைக் கழிக்கும் இலங்கைக்கு ஒரு பெண்ணைத் தேடிச் செல்பவனுக்குப் புலனடக்கம் |