10

கைங்கரியம் ஆகியவற்றால்கம்ப ராமாயணப் பணி தொடங்கிய வேகம்
தொய்வுபடாமல் தொடர்கிறது.

     நன்கொடைக்கு முதலில்உறுதியளித்த நல்லாசிரியர் திரு.
இ.வேங்கடேசலு, தொடர்ந்து பெருங்கொடைநல்கியருளிய தானசூர -
ஜகந்நாதப் பிரேமி திரு.ஆர். துரைசாமி நாயுடு, சேவாரத்ன டாக்டர் ஆர்.
வேங்கடேசலு நாயுடு,புரவலர் செம்மல் திரு. கிருஷ்ணராஜ் வாணவராயர்,
கொடை மரபின் வழிவந்ததிருமதி பிரேமா கோவிந்த சாமி, பேராசிரியர் அர.
சு. நாராயணசாமி நாயுடுநினைவு நிதிக் குழுவினர் ஆகியோர் இக்
கைங்கரியம் இனிது நிறைவெய்தப்பெருங்கொடை வழங்கி ஆதரித்தனர்.

     கொடுமுடியானபெருநிதியமாக லட்சுமி மில் மூலமாக ரூபாய் பத்து
லட்சம் கிடைத்திடக் கம்பன் அறநெறிச் செம்மல் திருமிகு ஜி. கே. சுந்தரம்
வழி வகுத்துதவினார்.

     திருமலை திருப்பதிதேவஸ்தான அறங்காவலர் குழு  ரூபாய் இரண்டு
லட்சம் வழங்குவதாக அறிவித்தது; இன்னமும் தொகை வந்து சேரவில்லை.
எனினும், திருவேங்கடவனின் அருட்பிரசாதம் வந்துசேர்வது உறுதி என்ற
நம்பிக்கை இருக்கிறது.

முடித்திருக்க வேண்டும்                              

     1992 மே மீ இந்தப்பணிக்கான முதற்கூட்டம் நடைபெற்றது. 1992
அக்டோபரில் கம்பன் டிரஸ்ட் இந்தப் பொறுப்பை ஏற்றது; நிர்வாகக் குழு,
நிதிக் குழு, உரையாசிரியர் குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பெற்றன.

     உரையாசிரியர்பலராக இருந்தால், பணி விரைவில் நடைபெறும்
என்பதால் அக் குழு விரிவானதாகவே அமைக்கப்பட்டது.

     முதலில் இட்ட திட்டத்தின்படி1994-ஆம் ஆண்டிலேயே உரை
வெளியீடு முடிந்திருக்க வேண்டும். பல்வேறு தடங்கல்களாலும்
தாமதங்களாலும் நினைத்தபடி பணி நடக்கவில்லை.

     இப்போதுநடைபெறும் பாங்கினைப் பார்த்தால் 1996 டிசம்பருக்குள்
பணிநிறைவெய்தும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.